யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதேநிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம், கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி, இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்து. இந்த செயற்பாடு பல்வேறு தரப்பினராலும் கண்டனத்துக்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சைவத்துக்கும், தமிழுக்குமாகத் தொடங்கப்பட்ட பாடசாலை என்ற வகையில், இதனை எதிர்த்து, […]

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது சுமார் 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்ததாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார். இந்தநிலையில் நாடு முழுவதும் இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட […]

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நிவாரணங்கள் குறிப்பிட்டப்படி வழங்க வேண்டும். அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்த்த நிவாரணங்களை ஜனாதிபதி கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் வாக்களித்து மக்களுக்கான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் […]

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பாதிப்பு உள்ளாகாத பகுதிகளிலுள்ள பெருமளவு மக்கள் ஒன்று திரண்டு பல நகரங்களை தன்னார்வமாக துப்பரவு செய்து வருகின்றனர். மற்றுமொரு பகுதியினர் தேவையானவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டுவர்கள், இலங்கையர்களாக மாறி களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் […]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக இறந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் பெறப்படவில்லை, பல மாணவர்களின் அனைத்து பாடசாலை புத்தகங்கள், பைகள் […]

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார். சூறாவளியால் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நாடு முழுவதும் பரவலான சேதம் ஏற்பட்டதை அடுத்து, தனது கருத்துகளின் போது இலங்கையை “நாங்கள்” என்று குறிப்பிட்டார். 465க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். வடகிழக்கு மலைப்பகுதியில் கணிசமான தமிழ் மக்கள் வசிக்கும் மற்றும் உள்நாட்டுப் […]

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பொருளாதார பாதிப்பு 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் ஏற்படும் மொத்த சேதம் 2.1 ட்ரில்லியனை விடவும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட உண்மையான சேதம் குறித்து அரசாங்கம் இதுவரை […]

யாழ். சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால், நேற்று சனிக்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கசிப்பு தொடர்பாக நீதிமன்ற பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் கைதியின் சகோதரி யாழ்ப்பாணத்தில், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பாக அவதூறு பரப்பும் […]

காவல் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

மாலபே காவல் நிலையத்தில் இன்று (07) அன்று காலை துப்பாக்கி வெடித்ததில் ஒரு காவல் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாலபே காவல் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, ஆனால் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொடை காவல் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்கான காவல் அதிகாரியின் நிலை மோசமாக இல்லை என்று […]

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு; பிரிட்டோரியா நகருக்கு அருகில் சவுல்ஸ் வில்லே டிவுன்ஷிப் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதி உரிய முறையில் உரிமம் பெறப்படவில்லை. இந்த விடுதிக்குள் அடையாளம் தெரியாத 3 பேர் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு எப்போதும் போல் பலர் அமர்ந்து, மதுபானம் அருந்திக் […]