யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இந்த நிதி ஒதுக்கிடு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார […]
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள பேரிடர் மேலாண்மை மையம் (DMC) எச்சரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மழை பெய்தால் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். வானிலையைப் பொறுத்து, கட்டுப்படுத்தப்பட்ட நீர் வெளியேற்றம் தேவைப்படலாம் என்பதால், ஆற்றின் கீழ் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் […]
நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை
பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது. ‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் […]
அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன் அறிவித்தல்களை அலட்சியப்படுத்தி அரசாங்கம் மக்களின் உயிரை பலியெடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் […]
பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவை மற்றும் அரச சேவை அல்லாத பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சந்தன சூரியஆரச்சி எம் பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் […]
மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை
மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5) இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இதற்கான உதவியை இராணுவத்தினர் விமானப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து, குழந்தையின் தாயார் கருத்து தெரிவிக்கையில், நானும் எனது குழந்தையும் 27ஆம் திகதி முதல் பிரிந்து இருந்தோம். நான் அபிசாவளையில் இருந்தேன்.எனது குழந்தை மீமுரேவில் இருந்தது.இந்தநிலையில் குழந்தை பற்றியோ, குடும்பத்தார் பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. நான் மிகவும் மனமுடைந்து இருந்தேன்.இந்த நிலையிலே […]
பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை திசையிலிருந்து கொழுப்பிட்டி நோக்கி வேகமாக வந்த லொரி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த டின்மீன் தொகை, நேற்று பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் கட்டளை அதிகாரி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் […]
அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!
ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இலங்கை மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்துக் […]
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கொடூரமான யதார்த்தங்கள் பற்றிய ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது ‘அவளின் பார்வையில்’ எனும் இந்த ஆழமான அனுபவம், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றிய விழிப்புணர்வு குறித்து இதுவரை முன்னெடுக்கப்படாத அணுகுமுறை ஒன்றின் மூலம், ஒலி மற்றும் காட்சி கதை சொல்லலுடன் நாடகக் கலையை ஒருங்கிணைக்கிறது ‘பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு […]