உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை எதிர் நோக்கிய இயற்கை பேரனர்த்தம் காரணமாக பாரியளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த பாதிப்புகள் தொடர்பில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற உதவிகளை கருத்திற் கொள்ளும் போது இந்த நிலைமையை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா இரண்டு மில்லியன் டொலர்களையும் இங்கிலாந்து 890000 டொலர்களையும் உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த […]

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்கள் முற்றாகச் சேதமடைந்து, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், தற்போது அறுவடைக் காலம் என்பதால், இந்த அழிவின் காரணமாகத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் பல்வேறு துணைத் தொழில்களும் இதனால் நலிவடைந்து வருகின்றன. நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள மரக்கறித் தோட்டங்களுக்குள் […]

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த முக்கியமான பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ளது. வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் சடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. அதற்கமைய, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கு சடலத்தையும் […]

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய வங்கி அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் 2025 ஆம் ஆண்டின் இல. 04 என்ற சுற்றறிக்கையை நேற்று (2025.12.05) வெளியிட்டது. வருமானம் அல்லது வியாபாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு (கடன்பாட்டாளர்கள்) நிவாரண வழிமுறைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். கோபிவத்தை, கோனபலை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வேத்தர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்வத்துடன் தொடர்புடைய 71 […]

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய குப்பைகளைச் சேகரிப்பதிலோ அல்லது கழிவு முகாமைத்துவ அமைப்பிலோ குறிப்பிடத்தக்க சவால்கள் எதுவும் எழவில்லை என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்கங்கள் இன்னும் உருவாகவில்லை என்றாலும், மீட்புப் பணிகள் தொடரும்போது இத்தகைய கழிவுகளின் ‘இரண்டாம் அலை’ ஏற்படும் என அமைச்சு எதிர்பார்ப்பதாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அதாவது, மக்கள் […]

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பை சீரமைக்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) அன்றோ அல்லது அதற்குள்ளாகவோ நிறைவு செய்யப்பட்டு, அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. டித்வா புயலின் தாக்கம் காரணமாக ரன்தெம்பே – மஹியங்கனை 132 கிலோ வோல்ட் மின் பரிமாற்ற அமைப்பின் ஒரு […]

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில் உள்ள ‘மஹகிரிதம்ப’ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு நிலைமை தொடர்பில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று அந்த இடத்திற்குச் சென்று, தற்போது நிலவும் பூமி உறுதியற்ற தன்மை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, அந்த பயணப் பாதையை சீரமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் […]

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (டிசம்பர் 5) மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி மற்றும் முறாவோடை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண உதவிகளும் பொருட்களும் வழங்கப்பட்டன. இது அவர்களுக்கு […]

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) விடுத்திருந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் […]