வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து பொறியியலாளரான நுவான் மதநாயக்க தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் தொழில்நுட்ப வசதிக்கு கொண்டு சென்று முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து வகையான ஒயில், பிரேக், பவர் ஸ்டீயரிங், கியர் எண்ணெய், என்ஜின் எண்ணை உட்பட அனைத்தை அகற்ற வேண்டும். மேலும் அவை வெண்மையாக மாறியிருந்தால், என்ஜினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். […]

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி மல்வத்து மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று (05) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் தொடர்பான அறிக்கையானது கடந்த 30.11.2025 அன்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் […]

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ‘டெஸ்லா’ நிறுவனருமான எலான் மஸ்க், 2022ல், ‘டுவிட்டர்’ சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி, பின், ‘எக்ஸ்’ என பெயர் மாற்றினார். இந்த ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட […]

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்குள்ள சிந்து மாகாணத்தில் மட்டுமே இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சிந்து மாகாணத்தின் மிர்பூர் சக்ரோவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், இந்து மாணவியரை கட்டாய மத மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை தொடர விரும்பினால், முஸ்லிமாக மாற வேண்டும் என, இந்து மாணவியரை […]

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதால், சிறாருக்கு உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாக பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து உள்ளன. லாக்கர் அவர்களை பாதுகாக்க, முதல் நாடாக ஆஸ்திரேலியா, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டென்மார்க், நார்வே, மலேஷியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், […]

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியது. 39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரிட்டன் அரசு கூறியது. இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரிட்டனின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் […]

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. அப்போது கூட்டத்திற்குள் கார் அதிவேகமாக புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. […]

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw) அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இவ்வருடம் முதன்முறையாக இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதற்கமைய அவ்விருதின் முதலாவது வெற்றியாளராக டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ‘சமாதானத்திற்காக விசேட […]

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற இந்திய – ரஷ்ய வணிக மன்றத்தில் உரையாற்றுகையில் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான (வெளியுறவு) கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், மிகச் சிறந்த பலன்களையும் அடைந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் இன்று உலகின் வேகமாக வளர்ந்து […]