பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது தமிழக அரசு!
‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக […]
வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வெலிமடை- நுவரெலியா வீதி இன்று சனிக்கிழமை (06) மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெலிமடை கெப்பட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து கடந்த மாதம் சனிக்கிழமை (29) முதல் வீதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் வெலிமடை- நுவரெலியா வீதி திறக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் நடவடிக்கை
மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி இன்று சனிக்கிழமை (06)காலை முதல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்காக திணைக்கள ஊழியர்கள் படையினர், கட்டைபறிச்சான், மூதூர், அம்மன்நகர், கங்குவேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது சீரமைக்கப்பட்ட […]
சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார். அதற்கமைய புதிய விடுமுறை விண்ணப்பங்கள் […]
600ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சூறாவளி புயல் டிட்வா மற்றும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது. மேலும் 214 பேரைக் காணவில்லை என்று பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. கடுமையான வானிலை நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 பேரைப் பாதித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நுவரெலியா (89 பேர்), பதுளை (83 பேர்), குருநாகல் (61 பேர்), […]
பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற பெண்ணின் மகனின் சடலம் மீட்பு; மகளை காணவில்லை?
அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில் இருந்து அனுராதபுரத்திற்கு சென்ற தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதனையடுத்து, நீரில் அடித்து செல்லப்பட்ட மகனின் சடலம் அனுராதபுர நகரத்தின் மிஹிந்துபுர பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நிலையில் 8 வயது திஷுகா மீரியகல்ல என்ற சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மல்வத்து ஓயாவில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன […]
36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்!
தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை […]
வீடு ஒன்றினுள் விச வாயு : குடும்ப பெண் உயிரிழப்பு!
வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். வழமை போன்று தனது […]
வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் – வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்தில் […]
உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரைபிரித்தானிய அரசாங்கம் அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது. பிரித்தானியாவால் வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணங்கள், அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.