யாரும் உதவி செய்யவில்லை; கடற்தொழிலாளர்கள் கவலை…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மன்னார் பனங்கட்டுகொட்டு கடற்தொழிலாளர்களுக்கு உதவி வழங்க யாரும் இதுவரையில் முன்வரவில்லை என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தி சென்ற புயலினால் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதும் இதுவரை யாரும் தம்மை வந்து பார்த்து தமக்கு எவ்வித உதவிகளும் வழங்க முன்வரவில்லை என மன்னார் பனங்கட்டுகொட்டு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மன்னார் மாவட்ட […]

கொழும்பு- தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொழும்பு- தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடானது தெஹிவளை-“A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக […]

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை(டிச.,7) போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த […]

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்!

“நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் நாராயணன் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நம் நாட்டில் விண்வெளி துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகள் ஏவப்படும். 2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நம் நாடு செய்து முடிக்கும். 40 மாடி உயர அளவு […]

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை மாநகர சாலை சிக்னல்கள் முன், குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை. பிச்சை எடுக்க பயன்படுத்தும் கைக்குழந்தைகள், எந்நேரமும் துாங்கிக் கொண்டிருக்கின்றன; இது, சந்தேகத்தை […]

அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பார்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரசியலமைப்பை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான டிச.,6ம் தேதி ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பார்லியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பிரதமர் மோடி, […]

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில் ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை – ஜனாதிபதி

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் கூறினார். மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் […]

2,000 மலைகளில் அறிவியல் ஆய்வு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வை நடத்தி, அரசாங்கத்திற்கு முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பில் நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த மாணவர்களையும், நீர்வள வாரியம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் நிபுணர்களையும் இந்தப் பணிக்காக ஈடுபடுத்த இந்த அமைப்பு நம்புகிறது.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 12 சைக்கிள்களை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை […]

வானிலையில் ஏற்படும் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]