யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம்?
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்தியன் இழுவை மடி படகுகள் அட்டகாசம் புரிந்துள்ளன. வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடற் பகுதி சீராக காணப்படுவதால் எமது பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்காக தற்போது அதிகளவானோர் கடலுக்குச் செல்கிறார்கள் எமது கடற்றொழிலாளர்களின் வலைகளை இந்திய இழுவை மடி படகுகள் அறுத்துச் செல்வதால் கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் […]
சைனா ஹார்பர் பகுதிக் கொலை: ஒருவர் கைது
திருகோணமலை, சைனா ஹார்பர் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் நேற்று (5) மாலை கதிர்காமம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சிறப்பு அதிரடிப் படை (STF) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர். திருகோணமலை, சைனா ஹார்பரில் உள்ள பஹே கனுவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் […]
அவசர மனிதாபிமான உதவி; நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!
டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) […]
தொடரை வென்ற இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் – டிகொக் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டிகொக் மற்றும் தலைவர் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிரடியாக […]
நீர் வழங்கல் கட்டமைப்பு 90 சதவீதம் வழமைக்கு வந்தது!
அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் செயலிழந்ததாக இன்று (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் […]
கோமா நிலையில் உள்ள யாழ்.சிறைச்சாலை கைதி தொடர்பான தகவல்
யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் கோமா நிலையில் உள்ள சம்பவம் குறித்து சிறைச்சாலை வட்டாரம் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது. கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக சந்திப்பொன்றை நடத்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், குறித்த கைதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாதிக்கப்பட்ட […]
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று (6) இரவு 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 4,071 […]
சிறை கைதிகளின் மனிதாபிமான செயற்பாடு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர்.
கண் தொற்றுகள் பரவும் அபாயம்
வெள்ளத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கிறது.
அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்
ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள் என யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு குரு முதல்வர் கிறிஸ்தவ மக்களை கேட்டுள்ளார். மேலும், பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு […]