5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) மாலை 4 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல், நிலம் தாழிறங்குதல் மற்றும் மண்திட்டு சரிதல் போன்ற அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு […]

சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த தேரர்கள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண, கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, வெள்ளிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்தது. Clean Sri Lanka செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க, […]

கோமா நிலையில் யாழ். சிறை விளக்கமறியல் கைதி: அவருக்கு என்ன நடந்தது – சகோதரி

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். […]

சீரற்ற வானிலையினால் சுமார் 1.7 மில்லியன் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் – ஜனாதிபதி

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். அதன்படி, சொத்து வரி 2026 ஆம் ஆண்டில் விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இயற்கை அனர்த்தத்தினால் […]

மழை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த […]

பேரழிவிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் நாடு மீண்டு வரும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

யாரும் எதிர்பாரா அளவிலான சேதத்தை எமது தேசத்திலே இந்தப் புயல் ஏஏற்படுத்தியுள்ளது. உறக்கத்திலிருந்தவர்கள் கண் விழிக்காமலேயே உயிரிழந்த சோகம் மிகப் பெரிது. நான் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்த போது அவர்களின் நிலைமை மிக வேதனையளித்தது எனபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய தினம்(05) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்திருக்கின்றார். அரசாங்கம், பொலிசார், முப்படையினர் என சகல விதமானவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது உயிரைப் பணயம் […]

அனர்த்த நிலைமை; வடக்கு மாகாண மக்களின் தேவைகள் தொடர்பில் இந்திய துணைத்தூதுவருக்கு மகஜர்

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை சந்தித்து கலந்துரையாடி, அனர்த்த நிலைமைகளின் பின்னரான வடக்கு மாகாண மக்களின் தேவைகள் தொடர்பில் மகஜரொன்றை கையளித்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கடந்த புதன்கிழமை இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் […]

பேரிடருக்கிற்கு உதவிக்கரம்; கனடா 1 மில்லியன் டொலர் அவசர மனிதாபிமான உதவி!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசு ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இந்த உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தற்காலிக தங்குமிடம், குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நம்பகமான சர்வதேச அமைப்புகள் மூலம் வழங்கப்படும். மேலும், இது உலக உணவுத் திட்டம் (WFP) மூலமாக முன்பே வழங்கப்பட்ட உதவியின் தொடர்ச்சியாகும். இந்த அறிவிப்பை கனேடிய தமிழர் பேரவை (CTC) […]

கொழும்பில் டிஜிட்டல் எதிர்காலம்; யூனிட்டி பிளாஸாவில் மூன்று முகங்களைக் கொண்ட மிகப் பாரிய LED திரை!

கொழும்பு நகரின் தோற்றத்தை அழகுபடுத்தி, புதியதொரு சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப் பாரிய வெளிப்புற LED டிஜிட்டல் திரையை 2025 டிசம்பர் 3 அன்று யூனிட்டி பிளாஸா திறந்து வைத்துள்ளது. On’ally Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், உயர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 2023 நவம்பரில் புதுப்பொலிவு பெறும் வகையில் மீள்நிர்மாணச் செயற்திட்டங்களை ஆரம்பித்த யூனிட்டி பிளாஸாவின் […]

நிவாரண உதவி தேவைப்படுவோர் விபரம்

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரியளவிலான நிவாரண உதவிகளை Behind Me Foundation வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அதே வேளை பின்வரும் பிரதேசங்களில் மேற்கொண்டு உதவிகளை வழங்க வேண்டியவர்கள் தொகை கீழ்க்கண்டவாறு அமைகின்றது. மட்டக்களப்பு சித்தாண்டி – 472 சங்கானை – 50 அனுராதபுரம் மஹிந்தபுர -210 வவுனியா ஈஸ்வரிபுரம் – 20 வவுனியா சிதம்பரநகர் – 25 வவுனியா சிவபுரம் – 10 வவுனியா புதுக்குளம் – 50 மன்னார் தம்பனைக்குளம் – 100 மன்னார் கட்டையடம்பன் -100 (சிறுவர்,முதியோர் இல்லம்) […]