வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்த வேளை தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது அவர்களை குற்றம் சாட்டி வருகிறது!

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர். வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]

தமிழ் மொழி புறக்கணிப்பு?

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழில் அவை வெளிவருவதில்லை என்று இலங்கை தமிழரசுக் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; பெண் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று பவுசர் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்?

அமெரிக்காவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் அவருக்கு இருந்த கடந்த காலக் குற்றவியல் தண்டனைகள் காரணமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றங்கள் காரணமாக அவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்குவதற்குத் தகுதியற்றவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சுமி குணசேகர என தகவல் வெளியாகியுள்ளது. இவர் அதன் தரவு பகுப்பாய்வு ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளராக பணியாற்றியதுடன், சந்தைப்படுத்தல் உதவிப் பேராசிரியராகவும் […]

6 மணிவரையான நிலவரப்படி; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607…

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, நாடு முழுவதும் 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் 1,211 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன கடற்றொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அத்துடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ந்த கல்லில் சுற்றுலாத் […]

யாழ்ப்பாணத்திற்கான அனர்த்த நிவாரணப் பணம் 36 கோடி ரூபா தேவையில்லை – அர்ச்சுனா இராமநாதன்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. வரவு- செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் புலம்பெயர் உறவுகள் பணத்தை அனுப்பி வைப்பார்கள் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் […]

பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பில் கவனம்?

விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறையை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். கடந்த 24 மற்றும் 26ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் கீழ் […]

பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள் மட்டுமே செயல்படுகின்றன?

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பாகிஸ்தானிய சிறுபான்மையினர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நீதி மற்றும் சமத்தும் கிடைப்பதற்கான கொள்கை சீர்திருத்தங்களை […]

சீரற்ற வானிலை; பெயலோன் தோட்டத்தை சேர்ந்த 47 குடும்பங்களின் கோரிக்கை

கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை, பெயலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவியது. இதன் காரணமாக 47 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பெயலோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டப் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழும் அபாயம் காணப்படுவதோடு, மக்களின் குடியிருப்புகள் தாழிறங்கியும், வீடுகளில் பாரிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, அத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் தற்காலிகமாகப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]