மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர மீட்பு பணிகளை தொடரும் முப்படை
பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான மீட்பு பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 28,500 சிப்பாய்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்தார். நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 31,057 நபர்களை மீட்பதற்கு முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்பில் தற்போது 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல […]
பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிப்பு
அனர்த்த நிவாரணங்களுக்காக குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று நேற்று (03) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அனர்த்த நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, அமைச்சரவையின் விசேட கூட்டமொன்றும் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்கவினால் குறித்த குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிவாரணம்
டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா […]
கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைந்த 114 குளங்கள்!
வவுனியாவில் பெய்து வந்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் புயலின் தாக்கத்தின் காரணமாக தாழ்நில பிரதேசங்களில் நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதனால் பல குளங்கள் வான் பாய்ந்ததுடன் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளது. இதன் காரணமாக மக்களுடைய குடிமனைகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் குளத்து வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் பல்வேறு பாதிப்புகளையும் […]
கிறிஸ்துமஸை ஆதரவற்றோர் மீதான அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் கொண்டாடுங்கள் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று (3) வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு விசேட அறிக்கையில் இதனை தெரிவித்த அவர், “நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர் அகதிகள் முகாம்களில் உள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு […]
இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள்; உண்மைத் தன்மையை மறைக்கின்றது அரசு – சுமந்திரன்
“இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “அரசாங்கத்துக்கு எதிராகப் பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்கக்கூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப் பணிகளும் சரியான முறையில் நடைபெறும்.” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “ஆழிப் பேரலை வந்தபோது அன்றைய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய கட்டமைப்பைத் தடுக்க நீதிமன்றப் படியேறிய […]
டித்வா புயலால் திருகோணமலை 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 25624 குடும்பங்களை சேர்ந்த 84812 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 214 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து (25.11.2025 _2025.12.03) நேற்று (03) மாலை 03.00 pm மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 653 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் […]
நவம்பர் மாதம் 12ஆம் திகதி அனர்த்தம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு பாரிய அளவில் புயல் தாக்கம் ஏற்படும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு கொள்ளவில்லை எனவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தம் தொடர்பில் கடந்த நவம்பர் […]
இலங்கைக்கு மிகப் பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பு? – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
இலங்கை மிக கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மித்த கவசத்தகடுகளில் மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன. மிகச்சிறிய அளவில் அதிகளவில் இடம்பெறும் நிலநடுக்கங்கள் பாரிய அளவில் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.அது தொடர்பிலும் இனி கவனம் செலுத்த வேண்டும். டிட்வா புயல் இலங்கையில் இன்னும் ஒருநாள் நிலைத்திருந்தாலும் தற்போதை உயிரிழப்பை விட ஐந்து அல்லது ஆறு […]