திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் கலெக்டரின் 144 தடை உத்தரவு, மேல் முறையீட்டு மனுவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் போராட்டம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரவு வரை திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடித்தது. இரவு 9:30 மணிக்கு மலைப்பாதை முன்பு ரோட்டில் மனுதாரர் ராமரவிக்குமார் தலைமையில் கார்த்திகை தீபம் ஏற்றி, ‘நிச்சயம் தீபத்தூணில் […]
1200 இண்டிகோ விமானங்கள் ரத்து; விசாரணைக்கு உத்தரவு
நவம்பர் மாதத்தில் 1,200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ நிறுவனத்திடம் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது. இதன்மூலம், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு காரணமாக 92 விமானங்களும், விமானம் மற்றும் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்தானது குறித்து பயணிகளிடம் இண்டிகோ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. […]
ஏவிஎம் சரவணன் காலமானார்
வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்த சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.,04) காலமானார். திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு […]
பேராறுப்பாலம் தற்காலிகமாக புனரமைப்பு
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள பாலம் தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக நேற்றையதினம் (03) மாலை குறித்த பாலத்தில் திடீரென உடைவு ஏற்பட்டிருந்தது. எனவே குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் ( RDD) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரோடு பொலிஸாரும் இணைந்து, தற்காலிகமாக வாகனங்கள் பயணிக்ககூடிய வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளநீரை மறித்து பிரதேசங்களுக்கு இடையில் அரசியல்வாதிகள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் , கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் […]
காணாமல் போனவர்கள் குறித்து வர்த்தமானி அறிவித்தல்
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்களில் காணாமல் போயுள்ள நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் புதிய வர்த்தமானி ஒன்றை பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, குருனாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுர, கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொணராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இது பொருந்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் […]
திருநெல்வேலி இளைஞர் படுகொலை; நீதிமன்ற உத்தரவு
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேரையும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 24 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர். பொலிஸாரின் தடுப்பு காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை […]
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வெளிநாட்டில் தொழில்புரியும் 19,000 இலங்கையர்கள் நிதிப் பங்களிப்பு
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்றுமுன்தினம் (02) வரை 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார். நிதி அமைச்சின் […]
கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடல்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மீண்டும் மூடல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
இன்று சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்
இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்கைகொண்டு செல்லும் பவனி, நேற்று (03) அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு, ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதிண்ண நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.