மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். போவத்த – வீரபோகுன பகுதியில் ஏற்பட்ட இடிபாடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (03) மதியம் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. வீரபோகுண ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டி போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் இறந்துள்ளார். 2007ஆம் […]
பேரிடர் முகாம்களில் உள்ள மக்களின் தேவை குறித்து வடக்கு ஆளுநர் ஆராய்வு
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் நேற்று (03) வெள்ளம் மற்றும் புயலால் இடம்பெயர்ந்து பேரிடர் முகாம்களில் உள்ள செட்டிகுளம் மக்களின் தேவைகளை மதிப்பிடுவதற்காக அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். செட்டிகுளம் நித்தியநகர் பாடசாலை மற்றும் கந்தசாமிநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட பல முகாம்களில் உள்ள மக்களையும் அவர்கள் சந்தித்து விசாரித்துள்ளனர். தங்குமிட முகாம்களின் சுகாதார நிலைமை இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியா சுகாதாரத் துறையால் […]
அரச ஊழியர்களின் தீர்மானம்: சுற்றறிக்கை வெளியீடு
ஊவா மாகாண சபையின் அரச ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தின் மறுகட்டமைப்புக்காக நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர். மாகாணத்தில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளும் இதற்கு தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பாக விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் வரலாறு, கலைப் பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை!
இலங்கையில் தமிழ் வரலாறு மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் இருந்து தமிழ் வரலாறு மற்றும் கலை பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை என கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தற்போது செயல்படுத்தப்படும் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் தமிழ் மன்னர்கள் தொடர்பான உள்ளடக்கம் அடங்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வரலாறு பாடம் தொடர்பில் சிங்களம் மற்றும் தமிழ் என தனித்தனியாகக் கற்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் இருந்து வந்த மன்னர்கள் மற்றும் இராஜ்ஜியங்களை […]
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அடிப்படை சிகிச்சை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உதவியுடன் இரண்டு வைத்தியசாலைகளும் சுத்தம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வெள்ளம் காரணமாக மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் கூற்றுப்படி, வில்பத்து தேசிய பூங்காவின் ஹ_னுவிலகம நுழைவாயில், யால தேசிய பூங்காவின் பலடுபன […]
மருத்துவக்குழுவை அனுப்பி வைத்தது ஜப்பான்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழங்குவதற்கு இலங்கைக்கு மருத்துவக் குழு ஒன்றை ஜப்பானின் வெளிநாட்டு உதவி நிறுவனம் அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுவின் சுமார் 30 உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (03) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் இவர்களை வழியனுப்ப வந்தனர். இதன்போது, “எங்களுக்குத் தேவையான நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் முன்வந்து நீங்கள் உதவி செய்த விதத்தை வார்த்தைகளால் […]
தண்ணிமுறிப்பில் திட்டமிடலின்றிய வீதிச்சீரமைப்பால் பல்வேறு நெருக்கடிகள்?
முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல்காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல்நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு விவசாயிகள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் முறைப்பாட்டையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று புதன்கிழமை (03) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு […]
யாழ். தையிட்டி விகாரை போராட்டத்தில் புகுந்த பொலிஸார் தாக்குதல்!
யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்ட களத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் குறித்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் மழை தொடர வாய்ப்பு…
வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
மேற்கு வங்கத்தில் 32,000 ஆசிரிய நியமனங்கள் ரத்து செல்லாது!
மேற்கு வங்கத்தில், 32,000 துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தப்பினர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2014ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை தொடர்ந்து, துவக்க பள்ளி ஆசிரியர்களாக, 45,000 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமன நடவடிக்கைகளில் […]