சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை புனரமைக்க தாமதம்
“சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக புனரமைக்க,வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று திருகோணமலை பிராந்திய நீர்ப்பாசன துறை பணிப்பாளர்,பிரதம எந்திரி க.சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்”மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த மிதமிஞ்சிய வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு சென்ற 30 ந் திகதி உடைப்பெடுத்தது”.”மாவிலாறுஅணைக்கட்டு பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு […]
வடக்கு-கிழக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இன்று (04)வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மாகாணங்களில் மிதமான மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. 2025.12.05 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணம், குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் (2025.12.05) வடக்கு, மத்திய மாகாணங்களில் மிதமான […]
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் 19 மாணவர்களும் கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் நேற்று (3) யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் குறித்த மாணவர்களை […]
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு
கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீதியூடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடகத்துறை […]
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பம்
வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும், புத்தளம் மாகாண அலுவலகத்தின் ஊடாக குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களும் உள்ளடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுர மாகாண அலுவலகத்தின் ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களும், மொனராகலை மாகாண அலுவலகத்தின் ஊடாக பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களும், யாழ்ப்பாண […]
பங்களாதேஷிடமிருந்தும் நிவாரணப் பொருட்கள்!
இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று நாட்டை வந்தடைந்தது. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ‘C-130’ விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீண்டும் கட்டணம் அறவீடு
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயண நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிடாதிருக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்திருந்தது.
நுரைச்சோலையில் வன்முறை; இருவர் வெட்டிக்கொலை
நுரைச்சோலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை மற்றும் மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவக்கடுவ பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயங்களுக்குள்ளான ஆணும் பெண்ணும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். உயிரிழந்த ஆண் 38 வயது எனவும் உயிரிழந்த பெண் 35 வயது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிப்படை தகராறு காரணமாக இந்த கொலை […]
வட்டுவாகல் பால தற்காலிக புனரமைப்பு நிறைவு
வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது. அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் […]