அமெரிக்க போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். சிறிய காயங்களுக்கு ஆளானார். இந்த விபத்து, தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் நிகழ்ந்திருக்கிறது. போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விமானி பாராசூட் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட […]
ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக தடையை மீறினால் அபராதம்

ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10 முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார். இதை தடுக்க, ‘ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் – 2024’ என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்தார். […]
இஸ்ரேல் வீரர்களைத் தாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்; அதற்கேற்ற பதிலடி இருக்கும்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை மையமாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையிலான போர் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளை கடந்துள்ள இந்தப் போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகக் […]
10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்; மீண்டும் தேடும் பணி

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமலாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதைத் தேடும் பணி இந்த மாதம் மீண்டும் தொடங்கப்படுவதாக மலேஷியா போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்றையதினம்(3) வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ டிசம்பர் 30 ஆம் திகதி முதல் கடலடி தேடலை மீண்டும் தொடங்கும் எனவும், இது 55 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த […]
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் சொத்துக்களை மீட்டெடுக்க சர்வதேச உதவி

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை முறைமைக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பை வழங்க, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஸ்டார் அமைப்பின் (StAR initiative) உயர் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று முன்தினம் (02) பிற்பகல் […]
சர்ச்சையாக மாறிய பாகிஸ்தானின் நிவாரணம்?

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து பாகிஸ்தானினால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் போலியான தகவல்கள் பரபரப்பப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டஇலங்கைக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியதாக பாகிஸ்தான் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை இலங்கையில் சிவில் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட அரிசி பைக்குள் அரிசி இருக்கவில்லை. வேறு பொருட்கள் இருந்ததனை அவர் உறுதி செய்துள்ளார். தனக்கு […]
நிவாரண மையத்திற்கு இடையூறு; மன்னிப்பு கோரிய சஜித்

கண்டி மாநகர சபைக்குள் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வந்த நிவாரண மையத்திற்கு இடையூறு ஏற்படுத்திய சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், சபை உறுப்பினர்களின் “மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற நடவடிக்கைகள்” காரணமாக பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார். குறிப்பாக, சமூகங்கள் மனிதாபிமான ஆதரவை நம்பியிருக்கும் இந்த நேரத்தில், தன்னார்வக் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த உறுப்பினர்களின் நடத்தை […]
தேசிய இரத்த வங்கியின் அறிக்கை..

‘திட்வாஹ்’ (Ditwah) புயலைத் தொடர்ந்து, இரத்த தானம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அவசர அழைப்பிற்கு இலங்கை மக்கள் அளித்த அபாரமான ஆதரவுக்கு தேசிய இரத்த வங்கி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார். வெறும் மூன்று நாட்களுக்குள் 20,000 க்கும் மேற்பட்ட இரத்த தானங்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவித்தார். தேசிய இரத்த வங்கியின் அன்றாடத் தேவை 1,500 அலகாக இருக்கும் நிலையில், பொதுமக்களின் […]
வீதி தாழிறக்கம்

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம்,லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி வியாழக்கிழமை (04) தாழிறங்கியுள்ளது. குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது. அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது, இதற்கிடையில்,பதுளையில் உள்ள அலகொல்ல மலைகளின் கல்வல பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தரையில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது, மேலும் அந்த இடத்திற்கும் தரை ஆய்வு […]
நிலச்சரிவுகளால் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

சுமார் 1,289 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் மண்சரிவு மற்றும் தொடர்புடைய பாதிப்புகளால் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (04) காலை நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட […]