கிண்ணியா கண்டல்காடு, சாவாறு பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 4) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்த வெடிப்பொருட்களை கண்டு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, கை குண்டுகள்109, துப்பாக்கி ரவைகள் 1678 மீட்கப்பட்டு திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் […]
86% மின்சார விநியோகம் வழமைக்கு வந்தது!

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86% தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 73 இலட்சத்திற்கும் அதிகமான மின் பாவனையாளர்களில் சுமார் 39 இலட்சம் பேருக்கு சீரற்ற வானிலையின் தாக்கத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த முயற்சியுடன் செயற்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, […]
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரலய, பஸ்பாகே கோரலய, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தொட்ட, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கேகாலை […]
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு

பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (04) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
மின்னல் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
பேரிடர் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் […]
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றல்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலை குறித்து புதன்கிழமை (03) அன்று இடம்பெற்ற சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்து காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டதுடன், பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இதன்போது […]
ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு நிதி

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்க ஐக்கிய இராச்சியம் 890,000 டாலர் நிதியை ஆதரவுடன் வெளிநாட்டு வேலை பார்க்கும் மஹா நிர்வாக தெரேசா ஓ’மஹோனி பெண்கள் அதிகாரி வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜித ஹேரத் அவர்களிடம் வழங்கினார். நாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மானுசீய பங்குதாரர்களுக்கு இந்த நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் உலங்குவானூர்தியை தரையிருக்கும் வேளையில் இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்த இலங்கை விமானப் படை விமானி விங் கமாண்டர் நிர்மலா சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனைப் பேண பொழுதுபோக்கு நிகழ்வுகள்

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான மீதொட்டமுல்ல அரச நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகம் மற்றும் கொலன்னாவ டெரன்ஸ் என். டி. சில்வா மகா வித்தியாலய வளாகங்களில், குழந்தைகளின் மன நலனைப் பேணும்வகையில் குறுகிய செயற்பாடு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நேற்று (03) நடத்தப்பட்டன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களின் இந்த முன்மொழிவானது, முன்பிள்ளைப்பருவ […]