பாதுக்கையில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு

பாதுக்கை – மாதுலாவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்ளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2,268 லீற்றர் கோடா (12 பீப்பாய்கள்) மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் பாதுக்கை – மாதுலாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துஹெர – வதாகட வீதியில் அஹகொட பாலத்திற்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொத்துஹெர நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற […]
இராணுவ தளபதி அசிம் முனீர் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி – இம்ரான் கான்

இராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி எனவும் தன்னை கொலை செய்ய இராணுவம் முயற்சிப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் […]
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக டிசம்பர் 2 ஆம் திகதி, 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அப்பகுதியில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், இன்று வியாழக்கிழமை (04) காலை 09 மணிக்கு இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரியகல்லாறு கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று(04.12.2025) கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற கடற்நொழிலாளர்கள் இவ்வாறு பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என அப்பகுதி பொதுமக்களும், கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் தெரிவித்துள்ளனர். […]
சாவகச்சேரியில் தங்க நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் வீடொன்றில் நேற்று அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டிருப்பதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சூறாவளியால் நிலைகுலைந்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப இயன்றளவு ஆதரவு – மாலைதீவு ஜனாதிபதி

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமைக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) தனது கவலையைத் தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பவும் இயன்றளவு தனது ஆதரவை வழங்குவதாக மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார். வியாழக்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாலைதீவு ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் […]
நல்லூர் பிரதேச வெள்ள நீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுகுமுறையை கொண்டுள்ளோம் – தவிசாளர் நிரோஷ் பதில்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது. உண்மைக்குப் புறம்பானது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் பிரதேச மக்கள் மறுத்துள்ளனர். அமைச்சரின் குற்றச்சாட்டினை அடுத்து பிரதேச மக்களுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , உப தவிசாளர் ஜனார்த்தனன், வட்டார உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட மேலும் […]
பாலங்களில் சிக்கியுள்ள பொருட்களை அகற்றும் நடவடிக்கை

வெள்ள அபாயத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிங் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில், தண்ணீர் சீராக செல்வதைத் தடுக்கும் வகையில் தேங்கியிருக்கும் பொருட்களை அகற்றும் நடவடிக்கை அகலிய, வடுவெலிவிடிய, முல்கட, அவித்தாவ, தொடங்கொட ஆகிய பாலங்கள் அருகில் 2025 நவம்பர் 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை காலி அகலிய மற்றும் குருநாகல் மாணிங்கமுவ பாலங்களில் சிக்கியிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கையை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை ( 04) மேற்கொண்டனர். கடும் மழை […]