அனர்த்தத்திற்கு உள்ளான மாவட்டங்கள் அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் XI ஆம் பகுதியின் 9 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக’ பெயரிடப்பட்டுள்ளன. கண்டி நிர்வாக மாவட்டம் […]
மீண்டும் புயல் வர வாய்ப்பா – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு புயல் தாக்குமென பரவும் வதந்திகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பதிலளித்துள்ளது. எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென வளிமண்டல ஆய்வாளர் மலித் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் காணப்படும் பகுதிகளை பார்வையிடுவதற்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல வேண்டாமென சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் […]
மறுசீரமைப்பு பணி களுத்துறையிலிருந்து நுவரெலியாவுக்கு உதவிக்கரம்
நுவரெலியா மாவட்டத்தின் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் நிவாரணங்களை விநியோகிப்பதற்கு களுத்துறை மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய குழு நேற்று செவ்வாய்க்கிழமை(02) அன்று வருகை தந்தது. இந்த நிவாரணத் திட்டம் கினிகத்தேன நகரில் தொடங்கியது, அங்கு களுத்துறையைச் சேர்ந்த குழுவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி நிலந்தி கோட்டச்சி, களுத்துறை மாவட்ட நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் […]
திட்வா சூறாவளி; பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு செயல்முறை
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய சூழ்நிலையில் மேற்கண்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடியாது என்பதால், வெள்ளம் […]
இந்தியா எப்பொழுதும் எம்மீது அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி – ரெலோ
இந்திய துணை உயர் ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது. நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது. அதேபோன்று இன்று எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள […]
ஒதியமலைப் படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்
முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று(02) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , புதுக்குடியிருப்பு […]
’தாவூதி போரா’ சமூகம் ரூ.100 இலட்சம் நன்கொடை
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீனின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால் நேற்று செவ்வாய்க்கிழமை (02) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் […]
வெளிநாட்டு நிவாரணப் பொருட்களுக்கு வரி இல்லை
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது. இதனிடையே, வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக நிவாரணங்களாக தேவைப்படும் பொருட்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் பின்னர் விமானம் அல்லது கடல் மார்க்கமாக நாட்டிற்கு அனுப்பும் பொருட்களை வரியின்றி விடுவித்துக்கொள்ள முடியும். இதற்காக இறக்குமதியாளரினால் குறித்த பொருட்கள், செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, […]
வடமத்திய மாகாணத்தில் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த மிளகாய் செடியில் பூஞ்சை நோய்கள் மற்றும் கருகல் நோயால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.