இன்னும் 5 ஆண்டுகளில் உலகப்போர் நடக்கும் – எலான் மஸ்க்

2030ம் ஆண்டுக்கள் உலகப்போர் நடக்கும் என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் சமூகவலைதளத்தில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், உலகளாவிய மோதல் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஹண்டர் ஆஷ் என்ற பயனர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில்,”போர் அச்சுறுத்தல்கள் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசுகள் செயலற்றுப் போயுள்ளன. எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் […]

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம்!

‘ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது’ என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ஐரோப்பா போரை நாடினால் அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் மோதலுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். […]

எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் – அதிபர் டிரம்ப்

‘இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை” என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், அதிபர் டிரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது […]

‘ஏர் இந்தியா’ விமானங்கள் உரிய தகுதிச் சான்று இன்றி இயக்கப்பட்டன?

‘ஏர் இந்தியா’வின், ‘ஏர்பஸ் ஏ320’ ரக பயணியர் விமானங்கள், உரிய தகுதிச் சான்று இன்றி கடந்த மாதம் பலமுறை இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், ‘ஏர் இந்தியா’ நிர்வாகம் மற்றும் டி.ஜி.சி.ஏ., அமைப்பு தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. ‘டாடா’ குழுமத்தின், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், குஜராத்தின் ஆமதாபாதில் கடந்த ஜூன் 12ம் தேதி கோர விபத்தை சந்தித்தது. இதில், ஒரு பயணி […]

இந்தியாவில் தேசிய விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2900 பேர் வரை கைது!

தேசிய விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாயும் உபா சட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 42 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 2,900 பேர் […]

மாநகராட்சி இடைத்தேர்தல்; 12 இடங்களில் 7ல் பா.ஜ வெற்றி

டில்லி மாநகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 7ல் பாஜ வெற்றி பெற்றது. ஆம்ஆத்மி 3 இடங்களில் வெற்றி பெற்றது. டில்லி மாநகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளுக்கு கடந்த நவ., 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 38.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில் 7 இடங்களில் பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துவர்கா-பி, ஷாலிமர் பாக், சாந்தினி சவுக், அசோக் விஹார், கிரேட்டர் […]

டிட்வா புயல் காரணமாக சென்னையில் தொடரும் மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி நடக்கிறது. வங்க கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், […]

சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் பின் அக்பர் ஹுசைன், பெயர் வெளியிடப்படாத மற்றொரு சிங்கப்பூர் நபர், மலேசியாவைச் சேர்ந்த சாமிநாதன் செல்வராஜு ஆகிய மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இன்று புதன்கிழமை (03) அன்று நடைபெறும் விசாரணைக்கு முன்னதாக […]

கிண்ணியாவில் போக்குவரத்து தடை

திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தரை வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது. இயந்திரப் படகு மூலமாக மக்களை ஏற்றி இறக்குகின்றார்கள் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளார்கள். காலநிலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் நீரின் வேகம் ஓரளவு குறைந்துள்ளது. எனினும் வீடுகளுக்குள் புகுந்த நீர் இன்னும் அவ்வாறே உள்ளன. நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும் மக்கள் போக்குவரத்து செய்ய […]

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.