ஆப்கானிஸ்தானில் குடும்ப உறுப்பினர் 13 பேரை கொன்ற சிறுவன்

ஆப்கானிஸ்தானில் 80 ஆயிரம் பேர் திரண்டிருந்த ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆப்கன் உச்ச நீதிமன்றம் அண்மையில் இந்த தண்டனையை நிறைவேற்ற அனுமதியளித்திருந்தது. அதனையடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 13 பேரை 10 […]

தமிழரசுக் கட்சியை ஜனாதிபதி விருப்பத்தோடு சந்திக்கவில்லை?

மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்தத் தீர்வை வழங்கினாலும் அது ஒருபோது நடைமுறைக்கு வரப்போவதில்லை என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளது. இது ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற ஒன்று அல்ல. தமிழரசுக்கட்சி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் பெயரில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. சாணக்கியனின் தந்தையாரின் மரணச் சடங்கிற்கு வந்த ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே […]

Behindme Foundation இன் மானுட நேயப்பணி!

இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் பேரிடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Behindme Foundation உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களை காக்கும் Behindme Foundation இன் பணிக்கு வலுசேர்க்கும் விதமாக கனடாவிலுள்ள கீழ்வரும் முகவரியில் அமைந்துள்ள எம்.ஜி நகை ஸ்தாபனம் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Address: 5928 Finch Ave East,Unit – 108,Scarborough, ON M1B 5P8 Phone: ‪+1 416-509-8222‬ Email: info@mgjewel.ca அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், மருந்துகள், பெண்களுக்கான அடிப்படைத் […]

மாணவர் கடன் திட்ட அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10ஆவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் காலம் 2025.12.15 வரை நீட்டிக்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், 2022, 2023 அல்லது 2024ஆம் ஆண்டுகளில் முதல் அல்லது இரண்டாம் தவணையாக கல்விப் பொதுத் தர (உயர்தர) பரீட்சை எழுதிய மாணவர்களிடமிருந்தும், 2025ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரத் பரீட்சை எழுதிய மாணவர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நிலவும் பாதகமான வானிலையைக் கருத்தில் கொண்டும், இந்தக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் […]

வானூர்தி ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Mi-17 உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் நுவரெலியா இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகரசபை மைதானத்தில் இருந்து கொத்மலையில் […]

பேரிடரில் இறந்தவர்களுக்காக துக்க தினத்தை அறிவியுங்கள்!

“உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க தினத்தை அறிவிக்கவும்,” என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை (03) அன்று பாராளுமன்றத்தில் கூறினார். மேலும், இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சேதமடைந்த 165 வீதிகளில் 111 வீதிகள் சீரமைப்பு

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 111 வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் கரை ஒதுங்கின…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இந் நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் […]

பனிப்புயல் கொட்டுவதால் அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் துவங்கி மார்ச் வரை குளிர்காலம் நீடிக்கும். இந்த சமயத்தில் அமெரிக்காவை கடும் பனிப்புயல்கள் தாக்கும். வெப்பநிலை மைனஸ் 10 முதல் மைனஸ் 25 டிகிரி செல்ஷியஸ் வரை சரியும். நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற வட கிழக்கு […]