சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது!

கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது. அந்த பிரதேசங்கள் கீழே.. பதுளை மாவட்டம் ஊவ பரணகம ஹல்துமுல்லை வெலிமடை பசறை சொரணாதோட்ட எல்ல பதுளை லுணுகலை கந்தேகெட்டிய மீகஹகிவுல பண்டாரவளை ஹப்புத்தளை ஹாலி-எல கொழும்பு மாவட்டம் பாதுக்கை சீதாவக்க கண்டி மாவட்டம் உடுநுவர பஸ்பாகே கோறளை பன்வில தொலுவ அக்குரணை தும்பனே ஹதரலியத்த உடுதும்பறை […]
அனர்த்த நிலைமை; மரணங்கள் 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (02) மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் (15 இலட்சத்து […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணk;; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய […]
உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரியில்

பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதிp மீண்டும் திறக்கப்படும். பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்; கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்… நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் […]
டிசம்பர் 4 முதல் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்

வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; டிசம்பர் 4 முதல் மழை அதிகரிப்பு எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 04 ஆம் திகதி முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் […]
வெள்ளப் பேரழிவு; ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கைகள்

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நாட்டில் நிலவும் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவுக்கான அரசாங்கத்தின் பதில் குறித்து பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். தேசிய ஒற்றுமை மற்றும் மீட்புப் பணிகள் * அனைவரையும் இணைக்கும் பொறிமுறை: நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி அனிருத்த திசாநாயக்கவின் கருத்தை ஐக்கிய மக்கள் […]
யாழ். அனர்த்த நிலைவரம்

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலைவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (02) வெளியிட்டுள்ளார். அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தென்மராட்சி,நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம்,காரைநகர்,நல்லூர்,கோப்பாய், உடுவில்,தெல்லிப்பளை,மருதங்கேணி,ஊர்காவற்றுறை,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1,710 குடும்பங்களைச் சேர்ந்த 5,443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை (02) அன்று […]
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்

தற்கொலை செய்து கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேடி அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போது பிரதேசவாசிகளினதும் உயிர்காக்கும் குழுவினரதும் உதவியுடன் அந்தத் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும், 4 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுமே இன்று (02) காலை 6.30 மணியளவில் […]
திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிக் கொலை; அறுவர் கைது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்று திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு Behindme Foundation இன் உதவிகள்…

இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் பேரிடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு Behindme Foundation உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மாத்திரமன்றி அடுத்த ஓரிரண்டு நாட்களுக்கான அத்தியாவசிய தேவைகளான குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், மருந்துகள், பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் குழந்தைகளுக்கான டயப்பேர்ஸ் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இலங்கையிலிருந்தோ அல்லது கனடாவிலிருந்தோ உதவ விரும்புபவர்கள் திரையில் காணப்படும் இலக்கங்கள் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை – கார்த்தி – 0094 774 404 […]