வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக முன்னாள் தலைவர் ஹில்மிக்கு விளக்கமறியல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவர் ஏ.எம்.எம். ஹில்மியை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு வெளிப்புற அடிப்படையிலான பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஜனவரி இல் நடத்தப்பட்ட கொள்முதல் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாக ஹில்மி மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளின்படி, அவர் சட்டவிரோதமாக விலைமனு […]

இத்தாலி – இலங்கை புதிய ஒப்பந்தம்

இலங்கை மற்றும் இத்தாலி அரசுகளுக்கிடையிலான சாரதி அனுமதிப்பத்திரம் அங்கீகரித்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி தொழிநுட்ப ரீதியான திருத்தங்களை உட்சேர்த்து மீண்டும் வலுவாக்கம் செய்வதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது. 06 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் இத்தாலியில் வசிக்கின்ற மற்றும் இத்தாலி வதிவிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் […]

இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர்…

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இறைவரித் திணைக்களத்தின் வருமான இலக்கு இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக […]

கனடிய பிரதமர் மார்க் கார்னி மீண்டும் அமெரிக்கா விஜயம்

கனடிய பிரதமர் மார்க் கார்னி மீண்டும் அமெரிக்கா விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஜீ20 மாநாட்டின் நிறைவின் செய்தியாளர் சந்திப்பில், டிரம்புடன் அண்மையில் தொடர்பு கொண்டீர்களா என ஊடகவியலாளர்கள் கார்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கான அவசியம் என்ன என கார்னி பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அது ஒரு சிறிய விபரம். நான் அவருடன் பேசினேன். தேவையான நேரத்தில் மீண்டும் பேசுவேன் என தெரிவித்துள்ளார். இப்போது அவசரமாக பேச வேண்டிய விஷயம் இல்லை. அமெரிக்கா […]

கியூபெக் மாகாண அரசாங்கம் “புதிய மதச்சார்பின்மை மசோதா”

கியூபெக் மாகாண அரசாங்கம் “புதிய மதச்சார்பின்மை மசோதா” ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது கியூபெக் மாகாணத்தின் பொது நிறுவனங்களில் மதச்சார்பின்மை விதிகளைத் தீவிரமாக விரிவுபடுத்துகிறது. குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் தொழுகை அறைகளுக்கு முழுமையான தடை விதிப்பதுடன், மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட உணவுகளைப் பொது நிறுவனங்கள் வழங்குவதைத் தடை செய்ய இந்த மசோதா முற்படுகிறது. எதிர்வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதா, பொது அமைப்புகளில் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் […]

3ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 3ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை புதன்கிழமை (26) காலை 8:00 மணி முதல் வியாழக்கிழமை (27) இரவு 8:00 மணி வரை அமுலில் இருக்கும். கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் , நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தந்தஹின்ன, மதுரட்ட மற்றும் […]

தாய்லாந்தில் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை!

தாய்லாந்தின் சில பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நிவாரணப் பணிகளுக்கு கொண்டு செல்ல இராணுவக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவிகளை மேற்கொண்டனர். கடந்த வாரத்தில் தாய்லாந்து தெற்கில் உள்ள பத்து மாகாணங்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, மலேசியாவின் எல்லையை அண்மித்த வணிக மையமாக ஹாட் யாய் நகரம், 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 335 மில்லிமீற்றர் மழையைப் பதிவு செய்துள்ளது. நகரத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் வீடுகள் நீரில் […]

சாவகச்சேரியில் காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க […]

வங்கிக்கு செல்ல ஏணி

ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில் நிலையம் வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன் பகுதியில் இருந்த மாடிப் படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டன. இதனால் முதல் மாடியில் உள்ள வங்கிக் கிளைக்கு செல்ல வழியில்லாமல் போனது. இந்நிலையில் இந்த வங்கிக்கு செல்ல அதன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மர ஏணியை பயன்படுத்தும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது இதில் பலரும் தங்கள் கருத்துகளை […]

அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது?

கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குள் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் கம்பஹா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணி புரியும் செவிலியர் என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை தடுத்து வைக்க பொலிஸாருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கூறி அவர் அவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார். கடந்த 23 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நீதிமன்றத்தை தவிர்ப்பதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட […]