கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி
கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சர்வதேச தரங்களுக்கமைய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை மாற்றி நீதித்துறையைப் பலப்படுத்துங்கள் – அருண் சித்தார்த்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதை விடுத்து ஏலவே இருக்கின்ற சட்டங்களை வலுப்படுத்தி பக்கச்சார்பின்றி பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார். நேற்று (25/11/2025) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் அங்கு கருத்து தெரவிக்கையில், குற்றக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய […]
போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனை
பயணிகள் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிய நடமாடும் சோதனை பேருந்தொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தால், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், நேற்றுமுன்தினம் (24.11.2025) மாக்கும்புர பல் போக்குவரத்து மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நடமாடும் பேருந்து, நாடு முழுவதும் பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை தேர்ந்தெடுத்து சோதனைகளை நடத்தவுள்ளது. பணியில் இருக்கும்போது எந்தவொரு ஊழியரும் போதைப்பொருளுக்கு ஆளாகியுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க இந்த சோதனைகள் உதவும். முதல் […]
கனடா மத்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
கனடாவின் மத்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு சட்டமூலம் சீ-12, குடியேற்றக்காரர்களின் உரிமைகளை மீறும் அபாயம் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. குடியேறிகள் உரிமைக்ள வலையமைப்பு, கனடிய அகதிகள் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகள், இந்த சட்ட மூலத்தை விமர்சனம் செய்துள்ளன. இந்த சட்ட மூலத்தை ஆய்வு செய்யும் குழுக்களில் சாட்சிகளாக சேர்க்கப்படாததால், […]
பருத்தித்துறை பிரதேச சபை; 2026 பாதீடு நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் காலை 10:30 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஆரம்பமானது. 20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்ட சபை அமர்வில் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் ; வடமராட்சி கிழக்கில் குருதிக்கொடை, மரக்கன்று வழங்கும் நிகழ்வுகள்
ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு இன்றைய தினம் நாகர்கோவில் குரு குலம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது இவ் குருதி நன்கொடை நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது பின் குருதித்தான நிகழ்வு இடம்பெற்றது இவ் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி பருத்தித்துறை நகர சபை […]
தூண்டிலுடன் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை
வாயில் தூண்டிலுடன் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை- உயிருடன் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள். தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் வாயில் இரும்பு தூண்டிலுடன் சிக்கிய அரிய வகை கடல் ஆமை யை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, சேராங்கோட்டை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் […]
முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன்
இந்த ஆண்டின் (2025) முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. குறித்த விடயத்தினை ஏற்றுமதி மேம்பாட்டு சபை (Export Development Board) தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி 6.0 சதவீதம் கணிசமாக வளர்ச்சியடைந்து, நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன் இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு (2025) […]
கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம்!
கியூபெக் மாகாண நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) சமர்ப்பிக்கின்ற மாகாணத்தின் பொருளாதார அறிக்கையில், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக்கின் முக்கிய தொழில்களுக்கான நிவாரணங்கள் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “வாங்கும் திறனையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்படும் இந்த அறிக்கை, உயரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, ஒரு சமச்சீரான வரவுசெலவுத் திட்டத்தைப் பேணுவதோடு, கியூபெக்கர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக கியூபெக் முதல்வர் […]
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் காலக்கெடு
வைத்தியர்கள் மற்றும் நாட்டின் பொது சுகாதார அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அறிவிக்க அதிகாரிகளுக்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணி நேர அவகாசம் விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சுகாதாரத் துறையின் உண்மையான சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ளதால், இலவச சுகாதார சேவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே பல முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தும் அவை […]