வரலாறு படைத்த மெஸ்ஸி
கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார். எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார். மெஸ்ஸி – ரொனால்டோ ஒப்பீடு இதன்மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 (896 […]
ஸ்ரீ லங்கா எக்ஸ்போ 2026 தயாரிப்பு; ஆக்கபூர்வமான கலந்துரையாடல்
ஸ்ரீ லங்கா எக்ஸ்போ 2026க்கான தயாரிப்புகள் குறித்து, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் இன்று ஆக்கபூர்வமான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். கூட்டத்தில் பங்கேற்றோர் இந்தக் கூட்டத்தில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர, ஏற்றுமதி […]
இலங்கை ஹோட்டல் சங்கத்தின் 60வது ஆண்டு விழா – அமைச்சர் விஜித ஹேரத் சிறப்புரை
இலங்கை ஹோட்டல் சங்கத்தின் (THASL) 60வது ஆண்டு விழா மற்றும் பொதுச் சபைக் கூட்டம் கொழும்பிலுள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் முக்கிய உரையாற்றினார். நாட்டின் சுற்றுலாத் துறையின் தற்போதைய சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல முக்கிய அறிவிப்புகளை அவர் பகிர்ந்துகொண்டார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சந்தை ஆதிக்கம் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் கணிசமாக […]
வவுனியாவில் இலத்திரனியல் காட்சியறையில் தீ!
ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை 9.45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர […]
முல்லைத்தீவு, கொக்காவிலில் துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் படுகாயம்
முல்லைத்தீவு, கொக்காவில் 4 இல் உள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இராணுவ வீரர் தெஹியத்தகண்டியாவைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவ வீரர் ஆவார். இராணுவ வீரர் தன்னிடம் இருந்த T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயன்றாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரினின் கருத்தை விமர்சித்த சஜித் அணி
நுகேகொடை பேரணியில் ஹரின் பெர்னாண்டோ ரணில் விக்ரமசிங்கவின் செய்தியை பொக்கட்டில் போட்டுக் கொண்டு தனது கருத்தை கூறினார் என்றே தோன்றுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அவர் நாமலை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிராரோ என சிந்திக்கவும் தோன்றுகிறது.கடந்த காலங்களிலும் சஜித்துக்கும் இவ்வாறு மேடைகளில் பிரசாரம் செய்தார். பின்னர் ரணிலுடன் ஒட்டிக் […]
குற்றவியல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல்!
குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்காணிக்கும் செயல்முறையைச் சீரமைக்கும் நோக்கில் ‘கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை’ (Arrested Monitoring Information System – AMIS) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த முறைமை மூலம், ஒரு நபர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றங்களுக்காகப் புகாரளிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை அதிகாரிகள் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக்கூடியது. முன்னர் […]
திருமதி நடராசா கமலம்
யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கம்பஹா நீர்கொழும்பு தழுபத்தையை வாழ்விடமாகவும் கொண்ட நடராசா கமலம் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,ருக்மணிதேவி, சரோஜினிதேவி, நந்தகுமார், அருள்தேவி, கலாதேவி, சிவகுமார், நிர்மலாதேவி, ஜெகதேவி, காலஞ்சென்ற மோகனா ஆகியோரின் பாசமிகு தாயாரும் அம்பிகைபாகன், கேதீஸ்வரன், பராசக்தி, ஆறுமுகதாஸ், அருள்தாசன், தமிழ்மதி, குகநேசன், ஸ்ரீகரன் […]
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் கொலை
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு(24.11.2025) இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் என்கின்ற குடும்பஸ்தரே குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பின்னர் நேற்றிரவு(24.11.2025) கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி தலைமறைவாகி இருந்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு 11 மணியளவில் முறிப்பு பகுதியில் வைத்து கைது […]
தடுமாறும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது. இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது (25) இன்று ரூ.6,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று, […]