அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவிலில் இன்று( நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றினார். முன்னதாக, ரோடு ஷோ வந்த அவருக்கு அயோத்தி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அயோத்தி ராமர் கோவிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இன்று தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கென கோவிலுக்கு வந்த […]

செம்மொழிவை பூங்கா திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை இன்று (நவ.,25) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவையில் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடி ரூபாயில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செம்மொழி பூங்கா, தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில், அரிய வகை தாவரங்கள், செடி, கொடிகள், மர வகைகளுடன் உருவாகியிருக்கிறது. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ., துாரத்துக்கு நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பசுமை சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ள […]

வெருகல் பகுதி காணிகளை விடுவிக்க பிரதேச செயலாளரால் கோரிக்கை வைத்தும் உரியவர்கள் செவிசாய்க்கவில்லை – சண்முகம் குகதாசன் எம்.பி

வெருகல் பகுதி காணிகளை வனத்துறையினர் உரிமை கோருகின்றனர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். நேற்று (2025.11.24 ) நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை முன்மொழிவின் பொழுது ஆற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். இப்பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் […]

இன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று (25.11.2025) மாவீர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவஞ்சலி இன்று இடம்பெற்றுள்ளது. இன்றைய மாவீரர் வார ஐந்தாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். நாகர்கோவில் குருதிக்கொடை ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான […]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டவர்; பிரித்தானியாவில் தஞ்சம்

இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர், 2022ஆம் ஆண்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டார். எனினும், சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். அவர் பிரித்தானியாவுக்கு சென்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இலங்கை அதிகாரிகள் அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்துள்ளனர். இந்தநிலையில், தாம் நாடு திரும்பினால் துன்புறுத்தப்படுவார் என்ற […]

காசியப்ப தேரர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

திருகோணமலை சம்பவத்தில் பௌத்த மதகுருமார்களுக்கு பொலிஸார் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று (24.11.2025) திருகோணமலை விகாரையின் தலைமை தேரரும் முறைப்பாடு செய்வதற்கு வந்திருந்தார். மேலும் நேற்று (24.11.2025) நீதிமன்றம் காசியப்ப தேரருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையும் அனுப்பியிருந்தது. இது தொடர்பில் தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, “அன்றைய சம்பவத்தில் பொலிஸார் தேரர்களை தாக்கி புத்தர் சிலையை […]

அரசாங்கத்திற்கு ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை!

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலபொடஅத்தே ஞானசார தேரர், இன்று (25.11.2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அண்மையில் நாட்டில் பதிவான உணர்வுப்பூர்வமான மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். திருகோணமலை சிலை அகற்றம் மற்றும் பௌத்தர்களின் உணர்வுகள் தேரரின் பிரதான கவனம் திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தின் மீது திரும்பியது. இச்சம்பவம் பௌத்தர்களின் அதி உள்ளுணர்வு உணர்வுகளைத் தூண்டும் ஒரு பாரதூரமான […]

நுகேகொடை பேரணி புறக்கணிப்புக்கான காரணம்:

நுகேகொடை பேரணி புறக்கணிப்புக்கான காரணம்: ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை அடிப்படையிலான அரசியல் மற்றும் சதித்திட்டங்களுக்கு எதிர்ப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். * நுகேகொடை பேரணி புறக்கணிப்புக்கான காரணம்: கடந்த 21 ஆம் தேதி நுகேகொடை நடந்த பேரணியில் ஏதோ ஒரு சதித்திட்ட நிலைமை இருப்பதாக உணர்ந்ததால், ஐக்கிய மக்கள் […]

கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவு: சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு ஊடக சந்திப்பு

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சமூக, நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளை உள்ளடக்கிய தொடர் நிகழ்ச்சிகளை நடத்த கடற்படை தயாராக உள்ளதுடன், இதன் கீழ், “Sailing Strong Together” என்ற கருப்பொருள் நடைபெறும். சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பு – 2025 குறித்த ஊடக சந்திப்பு நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நடைபெற்றது. […]

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமானது – செயலாளர் ஸ்டான்லி பிரஷாந்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க தற்போதைய செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந் தெரிவித்தார். கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பில் மாவட்டத்துக்கான பூப்பந்தாட்ட மாவட்டச் சங்கம் என்ற ஒரு அமைப்பு செயற்பாட்டில் இருக்கவில்லை. இதற்கு முன்னர் வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க நிர்வாகமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்துடன் […]