ஊழியர் சேமலாப நிதியத்தில் டிஜிட்டல் முறை அறிமுகம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது பொதுமக்களுக்கு திறமையான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் இணைய சேவைகள் அல்லது கையடக்க தொலைப்பேசி குறுஞ்செய்தி மூலம் ஊழியர் சேமலாப நிதியக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெறக்கூடிய ஒரு அமைப்பு […]

கொழும்பு துறைமுக வளாக மனிதப் புதைகுழிகள்; விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை

கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணைக்கு மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது, தீர்க்கப்படாத பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்கள் மற்றும் கடந்தகால அரச வன்முறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. நேற்று (24) நீதி அமைச்சுக்குச் சென்ற மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவன் போபகே ஊடகங்களிடம் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். மனித புதைக்குழிகள் தொடர்பான உண்மைகள் வெளிப்படைத்தன்மையுடன் […]

தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள்; மலையக அரசியல் அரங்கத்துடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடல்

தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்தாய்வு கூட்டங்களின் ஓர் அங்கமாக மலையக அரசியல் அரங்கத்துடனான கலந்துரையாடல் ஹட்டனில் நடைபெற்றது. நீதியும் நியாமுமான தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான மக்கள் இயக்கமான பவ்ரல் நிறுவனப் பிரதிநிகளுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான மேற்படி கலந்துரையாடலில் வாக்காளர்களைப் பதிவு செய்தல், வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல், முன்கூட்டிய வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்தல், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தல், […]

மணலாறில் மாவீரர் துயிலுமில்ல பணிகளை மேற்கொண்டவர்கள் மீது இராணுவம் தாக்குதல்!

மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் (25.11.2025) இடம்பெற்றுள்ளது. மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பொதுமக்கள் இன்றையதினம் காலை சென்று துப்பரவு பணிகளை செய்துள்ளனர். அப்போது சென்றவர்கள் மீது மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தினை சுற்றிவளைத்து அங்கிருந்தவர்கள் மீது இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும் துப்பாக்கியால் தாக்கி அடித்து விரட்டியதில் […]

யாழ்.பல்கலைக்கழகம்; பேரவை உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடனடியாகச் செயற்படும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களில் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு வராத உறுப்பினர் ஒருவரின் வெற்றிடமான இடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு – 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று […]

அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு!

அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்கள் வெட்டிக் கொல்ல வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்த சுமணரத்ன தேரர் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீதான வழக்கு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றையதினம் (25.11.2025) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைபுகுணர் வருவதற்கு வழங்கப்பட்ட அவகாச காலத்துக்கு பிறகு பரமாணந்தம் என்ற ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளார். இது ஒரு காலாவதியான விண்ணப்பம் என எமது தரப்பினால் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான […]

இலங்கைக்கு அனர்த்த அவசர முன்னெச்சரிக்கை – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும். இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும். இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் […]

பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடத்தின் மாணவி அனன்யாவுக்கு 4 சம்பியன் பட்டங்கள்

இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் நடத்தப்பட்ட இலங்கை டென்னிஸ் சங்க யெட்டி (Yeti) கடினதரை சம்பியன்ஷிப்பில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி அனன்யா நோபட் 4 சம்பியன் பட்டங்களை சுவீகரித்து அசத்தினார். அத்துடன் நின்று விடாமல் ஓர் உப சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்து டென்னிஸ் பிரியர்களைப் பிரமிக்கவைத்தார். பதினான்கு வயதே நிரம்பிய அனன்யா 3 ஒற்றையர் சம்பியன் பட்டங்களையும் ஓர் இரட்டையர் பட்டத்தையும் சுவீகரித்தார். பாடசாலை மாணவி ஒருவர் ஒரே டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அதிக சம்பியன் […]

சீரற்ற வானிலையால் யாழில் 297 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (24) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களினதும் தற்போதைய நிலவரம் ஆராயப்பட்டபோது, முல்லைத்தீவு: […]