கனடாவில் ஹைஹூண்டாய் நிறுவனம் வாகனங்களை திரும்பப் பெறுகின்றது?
ஹைஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில், பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பின் சேக் வால்வு, எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எரிபொருள் தொட்டி சூடான கூறுகளுடன் தொடும் அபாயம் உள்ளது; அதனால் எரிபொருள் கசிவு ஏற்படலாம் இந்த திரும்ப பெறல் 2020–2023 […]
முஸ்லிம்கள் வாக்களிக்காததால் தான் எமது சடலங்களை கோட்டாபய எரித்தார் – உதுமா லெப்பை எம்.பி.
கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமா லெப்பை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம்
மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட […]
தற்போதைய அரசாங்க அதிகாரத்தினால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்!
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து நீதிபதிகளை நீக்குதல், இடமாற்றம் செய்தல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி, இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர எச்சரித்தார். வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஜனநாயகத்தின் முக்கிய தூண் என்று ஜெயவீர ஒரு அறிக்கையில் கூறினார், ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் அந்த சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளைக் குறிக்கின்றன என்றும் கூறினார். அரசியல் செல்வாக்கு நீதித்துறைக்குள் முடிவுகளை […]
வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டமூலம் தயார்
வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இதில் இணங்காதவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்டம் நடைமுறைசெய்யப்படவுள்ளது. இந்தக் குற்றங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் தண்டனைகள் விதிக்கப்படும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்மொழியப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையக யோசனையை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க […]
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் இல்லை!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்த மாற்றங்களைப் பரிசீலித்து வருவதாக செய்திகள் வந்தாலும் குறித்த சட்டம் ஏற்கனவே பொதுமக்களுக்கு உதவியுள்ளது. இதன் காரணமாக அதை பலவீனப்படுத்தக்கூடாது என்று சமூக நீதிக்கான இயக்கம் குறிப்பிட்டுள்ளது. அதற்கு பதிலாக, பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற ஆணையகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கோரியுள்ளது. […]
அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார் – சிவஞானம்
பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட எந்தப் பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்கத் தயார், நாம் ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை, சமஷ்டியைக் கைவிடவுமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கூட்டாகச் செயற்பட எல்லாக் கட்சிகளுடன் பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் […]
ஏலத்தில் டைட்டானிக் கப்பல் தங்க கடிகாரம்
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்த கப்பல் பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதற்கிடையே அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் […]
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்
இலங்கை, சிம்பாப்வே பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் முதலே சிம்பாப்வே, இலங்கையை வென்றிருந்த பாகிஸ்தான் ராவல்பின்டியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பாகிஸ்தான்: 195/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 74 (52), சஹிப்ஸடா பர்ஹான் 63 (41), பக்கர் ஸமன் ஆ.இ […]
டொட்டென்ஹாமை வீழ்த்திய ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக எபெரெஷி எஸே மூன்று கோல்களையும், லியான்ட்ரோ ட்ரொஸார்ட் ஒரு கோலையும் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றிருந்தார்.