மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சமூக ஊடகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை கட்டுப்பாடுகளை விதிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை (23) மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். சைபர்புல்லிங், நிதி மோசடிகள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற இணைய வழி வன்முறைகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உடல்நலம் […]
மித்ர சக்தி பயிற்சி முடித்து நாடு திரும்பிய படையினர்

இலங்கை-இந்திய இருதரப்பு இராணுவப் பயிற்சியின் 11ஆவது பதிப்பான மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். 2025 நவம்பர் 10 முதல் 22 வரை இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற படையினரே மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். இந்தப் பயிற்சியில் 125 இலங்கை இராணுவ வீரர்களும் 10 இலங்கை விமானப்படை வீரர்களும் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி இரு படைகளுக்கும் இடையிலான இராணுவ […]
மீள்குடியேற்றத்துக்காக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 2500 வீடுகள் – சுசில் ரணசிங்க

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைப்பெறவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு […]
யாழ். மாவட்டத்தை முன்னிலைப்படுத்திய நடவடிக்கை!

கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்று (23.11.2025) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்வது அவசியம்.விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் […]
தம்புள்ளையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை!

மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ. 700 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை புதிய இடத்தில் நிறுவுவது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (23) தம்புள்ளை வளகம்பா பிரிவெனா வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த புதிய மருத்துவமனையின் முழு கட்டுமானத்திற்கும் சுமார் பன்னிரண்டு பில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் கட்டத்தின் கீழ் 130 […]
வடக்கின் அபிவிருத்தி சார்ந்த கோரிக்கைகளை அரசாங்கம் சாதகமாகவே பரிசீலிக்கிறது

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும் என வும் அவர் கூறியுள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா நேற்று […]
இலங்கையில் ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட கூடாது – எஸ்.எம்.மரிக்கார்

இலங்கையில் ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நான்காவது அரசாங்கமாக ஊடகங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். எனவே ஊடகங்கள் மீதான தணிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் என்பது இலக்கங்களை காண்பிப்பது அல்ல எனவும் அவை இலக்குகளை அடைவது எனவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் […]
தொல்லியல் பெயர்ப்பலகை அகற்றல்; அம்பிட்டிய தேரர் சீற்றம்

மட்டக்களப்பில் தொல்லியல் நிலங்களின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது கண்டனத்துக்குரிய செயற்பாடாகும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச சபை பகுதிகளில் உள்ள தொல்லியல் நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக நாட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (24.11.2025) கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் விகாரைகள் குறிப்பிட்ட சிலவையே காணப்படுகின்றன. மேலும் தொல்லியல் விகாரைகளுக்கு இன்றைய நிலையில் எங்களுக்கு செல்லவும் முடியாது, ஒன்றும் செய்யவும் முடியாத […]
சுகாதார வைத்திய அலுவலகம் விசேட சோதனை

திருகோணமலைப் பிராந்திய சுகாதார வைத்திய அலுவலகத்தின் அனுசரணையுடன், கந்தளாய் பிரதேச சுகாதார வைத்திய அலுவலகம் முன்னெடுத்த மூன்று நாள் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் 21, 22, மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. கந்தளாய், வான எல, ரஜ எல, அக்போபுர, மற்றும் கந்தலாவே ஆகிய பிரதேசங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பான உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் உணவு […]
நடிகை கயாத்ரி டயஸிடம் சீ.ஐ.டி விசாரணை

பிரபல நடிகையும், அழகுக் கலை நிபுணருமான கயாத்ரி டயஸிடம் குற்றப்புனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலமொன்றை அவர் வழங்கியிருந்தார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் பதிலளித்து விட்டு வந்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே ஊடகங்களிடம் இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் […]