இளவாலையைச் சேர்ந்த இளைஞர் கடலில் மூழ்கி பலி
யாழில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று(21.11.2025) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளவாலை – தும்பளை பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸன் ஸ்ரிபன் மதிவாணன் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரின் மாமனார் அட்டை பண்ணையை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் குறித்த இளைஞனும் […]
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் சமம் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருந்தால் மாவீரர்களது கனவை நனவாக்க வேண்டும் – சுமந்திரன்
இந்த நாட்டில் அனைவரும் சமம் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் எமது மாவீரர்களது கனவை நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோது ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு குறித்து […]
அரசியல் ஆதரவுள்ள குழு; கிளிநொச்சிக்கு சுத்தமான குடிநீரை வழங்கத் தடை
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை போகின்ற அரசியல் தரப்பு ஒன்றின் ஆதரவுள்ள சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]