அரசாங்கம் காணியை சுவீகரிக்கப்போவதாக தகவல்; சிறீதரனின் முகநூல் பதிவு சர்ச்சை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூல் பக்கத்தில் அரசாங்கம் காணியை சுவீகரிக்கப்போவதாக தவறான தகவல் பதிவிடப்பட்டதாக தெரிவித்து வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரொருவர் சபை அமர்வில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது சபையில் காணி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது எழுந்த தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரொருவர் அண்மையில் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதிக்கு விஜயம் செய்த […]
பேராதனை பல்கலை விரிவுரையாளர் கடுகண்ணாவ அனர்த்தத்தில் பலி
நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரிழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என்பவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடுகண்ணாவவில் இருந்த ரொட்டி கடை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் கடை மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கல்வி கற்று […]
நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 6 அடி மற்றும் 4 வான் கதவுகள் தலா 4 அடி என திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று வாரியபொல பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் […]
பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கம்; யாழ்.பழைய பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் ஓர் மூடத்தனமான செயல்
தற்போது புதிதாக உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பது பழைய பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் ஓர் மூடத்தனமான செயல் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். பழைய பூங்காவில் புதிதாக உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பதற்கான அத்திவாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணப் பழைய பூங்கா யாழ்ப்பாணத்தின் ஓர் தொன்மைவாய்ந்த அடையாளம் மாத்திரம் […]
போதைப்பொருளை எரித்தது நான் தான் – மைத்திரி
முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தில் நல்ல மற்றும் தீய விடயங்கள் ஆகிய இரண்டும் உள்ளன. உதாரணமாக போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். வேறு […]
இஸ்ரேலின் வான் வழித் தாக்குதல்; 9 பேர் பலி
காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டனர் என காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முட்டைத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிவேரிய நகரில் உள்ள முட்டை வியாபார நிலையமொன்றில்; இருந்து முட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைத்த புகாரினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதற்கமைய, சிசிடிவி காணொளி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் இரவில் முச்சக்கரவண்டியில் வந்து கொள்ளையடிக்கப்படுவது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்தவர் […]
குரங்குகளிடமிருந்து கிராமங்களை பாதுகாக்க துப்பாக்கி வழங்குங்கள் – செ. நிலாந்தன்
குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரதேச சபை […]
மழையுடனான வானிலை சில தினங்களுக்கு தொடரக்கூடும்?
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில […]
பீடி இலைகள் மற்றும் படகுடன் ஒருவர் கைது!
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், நேற்று (22) பிற்பகல் பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் 04 படகுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பமுனுகம பொலிஸார் 1500 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், துங்கல்பிட்டிய பொலிஸாரால் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் […]