எம்.பி ஜீவன் தொண்டமானுக்கு திருமணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இந்தியாவில், தமிழ்நாடு, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை வீதியில் அமைந்துள்ள ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இத்திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க […]

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு மிகமோசமான மனிதப்பேரவலம் – தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 […]

பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்குவோம் – மோடி

தென் ஆப்ரிக்காவில் ஜி- – 20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், நரேந்திர மோடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களை எதிர்ப்பது உள்ளிட்ட யோசனைகளை அமைப் பிடம் முன்வைத்தார். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் ஒருபகுதியாக, ‘அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் நேற்று நடந்தது.இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக வளர்ச்சிக்கான அளவுகோல்களை மறு பரிசீலனை செய்வதற்கான சரியான […]

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

டிச.,10ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடக்கிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், டிசம்பர் 10ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு […]

20 கோடி கலப்பட நெய் லட்டுகள் விற்பனை;  திருப்பதி தலைவர்

“திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த, 2019 – 24 வரையிலான காலக்கட்டத்தில், 49 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை,” என, தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவின் திருப் பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். விசாரணை இங்கு, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ‘டெண்டர்’ விடப்பட்டு, பல்வேறு […]

வங்கக்கடலில் நவ.26ம் தேதி புயல்?

தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.,26ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. இது நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி […]

மாற்றத்துக்கான அறிகுறி நாங்கள் – தவெக தலைவரும் நடிகருமான விஜய்

”நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி. மாற்றத்துக்கான அறிகுறி,” என காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணாதுரை பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணாக இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் […]

கனடாவின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் புலம்பெயர்ந்தவர்கள்- அமெரிக்க துணை ஜனாதிபதி

கனடா தொடர்பான பலதரப்பட்ட கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வர நிலையில் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். கனடாவின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் புலம்பெயர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ். அதேபோல கனேடிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படாமல் இருப்பதட்கு கரணம் டிரம்ப் […]

பழமையான ஆமையின் புதைபடிவத்திற்கு உலகப் புகழ்பெற்ற ஷகீராவின் பெயர்

கொலம்பியாவில் ஆராய்ச்சியாளர்கள் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆமை புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த ஆமையின் புதைபடிவத்திற்கு உலகப் புகழ்பெற்ற கொலம்பிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடனக் கலைஞரான ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளால் இந்த 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆமை புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதைபடிவம் ஒரு மண்டை ஓடு மற்றும் ஆமையின் முழுமையான ஓடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்நிலையில், மற்றும் கிராமி விருது பெற்ற பாடகி ஷகிராவின் நினைவாக, குறித்த புதைபடிவத்திற்கு […]

செயற்கைத் தீவு; சீனாவின் புதிய பிரம்மாண்ட திட்டம்

அணுகுண்டு வெடிப்புகளைத் தாங்கும் திறன் கொண்ட, 78,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான செயற்கைத் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. அதிகாரப்பூர்வமாக ‘ஆழ்கடல் அனைத்து காலநிலை வசிப்பிட மிதக்கும் ஆராய்ச்சிக் கூடம்’ (Deep-Sea All-Weather Resident Floating Research Facility) என்று அழைக்கப்படும் இந்த மிதக்கும் அமைப்பு, சீனாவின் “தொலைதூரக் கடலுக்கான நகரும் தீவு” என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த மிதக்கும் தீவு, சீனாவின் ஃபுஜியான் (Fujian) விமானம் தாங்கி கப்பலின் அளவுக்கு விசாலமானதும், அரை நீர்மூழ்கிக் கட்டமைப்புடன் […]