கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; ஒருவர் பலி

சீமெந்து தூள் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கொச்சிக்கடை எனும் இடத்தில் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடை – மனவேரிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சிவலிங்கம் யோகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியில் மேலும் இருவர் பயணித்ததுடன், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். […]

இம்மாத இறுதிக்குள் வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம்

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர். நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத […]

மியான்மாரில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணைய மோசடி மைய சோதனைகளில் கிட்டத்தட்ட 1,600 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக மியான்மார் தெரிவித்துள்ளது. இதில் பெருமளவான சீன நாட்டவர் உள்ளடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து எல்லையில் உள்ள ஒரு பிரபலமான இணைய மோசடி மையத்தில் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 1,600 வெளிநாட்டினரை கைது செய்ததாக மியான்மார் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மாரின் எல்லைப் பகுதிகளில் இந்த மோசடி அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இணைய பயனர்களை குறிவைத்து மோசடி இந்த அலுவலகங்கள், தீமை தரும் செயற்பாடுகளுடன் […]

பௌத்த தேரர்களுக்கு திருகோணமலையில் நடந்த தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருகிறார் சஜித்

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம். அதனால் […]

சரணாலயத்தில் கஞ்சா செடிகள்

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரினால் நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது மூன்று பெரிய அளவிலான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையின் படி, அவ் இடத்திலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் 50 கிலோகிராம்களுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஐந்து ஏக்கர், மூன்று ஏக்கர் மற்றும் இரண்டு ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சோதனையின் போது மூன்று […]

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் குறித்து புகழாரம்

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் குறித்து ரவி சாஸ்திரி மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் நாட்டை அமைதியாக்கினாய் என்று தொடங்கிய ரவி சாஸ்திரியை இன்னமும் உலகக் கோப்பை போட்டியை மறக்கவில்லையா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார். முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் சொதப்பிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸிக்கு 205 ஓட்டங்கள் […]

புருணையை வென்ற இலங்கை

சீனா, சொங்குவிங் யொங்சுவான் ஸ்போர்ட்ஸ் சென்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற 17 வயதுக்குட்ட ஆசிய கிண்ண ஏ குழு தகுகாண் கால்பந்தாட்டப் போட்டியில் புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணியை 4 -0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றிகொண்டது. 17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிச் சுற்றுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் தகுதி பெறாத இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை இலங்கை இளைய வீரர்கள் திறமையாக விளையாடி […]

பசுபதி நடிக்கும் ‘குற்றம் புரிந்தவன்’ முன்னோட்டம் வெளியீடு

வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் நடிகர் பசுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குற்றம் புரிந்தவன் :தி கில்டி ஒன்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இந்த இணைய தொடர் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது. இயக்குநர் செல்வமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றம் புரிந்தவன் : தி கில்டி ஒன்’ எனும் இணைய தொடரில் பசுபதி, விதார்த், லட்சுமி பிரியா சந்திர […]

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இத்தாலியின் விருது

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்தாண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து அவரது மனைவி ஷாலினி தனது […]

‘நடனப் புயல்’ – ‘இசைப் புயல்’ ; ‘மூன் வாக்’ பாடல் வெளியீடு

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில், ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் ‘மூன் வாக் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஸ்டோர்ம்..’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீ தரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மூன் வாக்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு ,அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சுஷ்மிதா நாயக், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி, தீபா […]