மன்னாரில் தமிழரசுக் கட்சியின் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (23) மன்னார் புகையிரத வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் ப.குமார் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் […]
திருமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்தவர் மீது தாக்குதல்

திருகோணமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்த ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது வெள்ளிக்கிழமை (21.11.2025) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் வைத்திசாலையில் இருந்து அவர் வெளியிட்ட காணொளியில் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை விரட்டியதற்கு பலி தீர்க்கும் வகையிலேயே என்னை தாக்கியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லும் போதும் தாக்கப்பட்டேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. […]
பி.பி.சி இயக்குநர் பதவி விலகல்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2021ம் ஆண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி தவறுதலாக எடிட்டிங் செய்து ஒளிபரப்பியது வன்முறையை துாண்டும் விதமாக அமைந்தது. இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., நிறுவனம் மீது டிரம்ப் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, பி.பி.சி., செய்தி பிரிவு இயக்குநர் டிம் டேவி மற்றும் தலைமை செய்தி பிரிவு நிர்வாகி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். தற்போது, இந்திய […]
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கனடாவில் சட்ட மூலம்?

கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது. அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின் வரைவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்படலாம் என்று மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது அல்பெர்டா விஸ்கி என்ன? அதற்கான தரநிலைகள் என்ன?—இவற்றை நிர்ணயிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பணியானது செயற்கை நுண்ணறிவு திறன்களை சோதிப்பதற்கு சிறந்த […]
பல குற்ற செயல்களில் தேடப்பட்ட நபர் கனடாவில் கைது!

கனடாவின் பல குற்ற செயல்களில் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான 23 வயது நிக்கலஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் குறித்த நபரை தேடி வந்தனர். கொள்ளை மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஐந்து வருடம், சிறைத்தண்டனையில் இருந்து வந்த நபர் சிறையில் தப்பியோடியிருந்தார். அக்டோபரில் வெளியிடப்பட்ட கனடாவின் அதிகம் தேடப்படும் 25 பேரின் பட்டியலில் சிங் 15வது இடத்தில் இருந்தார்.ரோண்டோவில் பாத்ரஸ்ட் Bathurst மற்றும் டுன்டாஸ் […]
2026 கால்பந்து உலகக் கோப்பை; மிகச்சிறிய நாடு தகுதி!

2026 ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு குராக்கோ முதல்முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் பிரவேசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சாதனையை படைத்தது. ‘பி’ பிரிவில் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் அரங்கேறிய குராக்கோ- ஜமைக்கா அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. லீக் முடிவில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள குராக்கோ 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று […]
ஆஸ்திரேலிய ஓபன் பட்மீன்ட்டன்; இந்தியாவின் லக்ஷயா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் பட்மீன்ட்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் பட்டம் வென்றார். மிகவும் கடினமான இந்த சீசனில், லக்ஷயா சென் தனது முதல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சூப்பா் 500 இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் இந்தியாவின் லக்ஷயா சென் மோதினார். இந்தப் போட்டியில், லக்ஷயா சென் 38 நிமிஷங்களில் 21-15, 21-11 என இரண்டு கேம்களிலும் அசத்தலாக வென்று தனது வெற்றியை கொண்டாடினார். […]
சீரற்ற வானிலை; உயிரிழப்பு அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளில் பாறைகள் விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இந்நிலையில், 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்பபடி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, […]
முதல் உள்ளக விளையாட்டரங்க கட்டுமானம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி.பிரேமச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.
நல்லூர் கிட்டு பூங்காவில் ‘கார்த்திகை மலரே’ இசைப்பாடல் வெளியீடு

நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ‘கார்த்திகை மலரே!’ என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க. சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ”கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் […]