சர்வதேச கடற்றொழிலாளர் தினம்; முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் நடைபவனி
முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது. சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கரையோர இளைஞர்கள் இணைந்து நேற்றையதினம்(21.11.2025) காலை நடைபெற்ற இந்நடைபவனியில், கடல்சார் வளங்களை பாதுகாக்கவும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சட்டவிரோத கடற்றொழிலை இலங்கை அரசாங்கம் முற்றுமுழுதாக தடை செய்ய […]
சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலக எதிர்ப்பு; காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி தடையாகிறது?
சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிப்பதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தடைக்குள்ளாக்கப்படுவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளின் சட்டத்தரணியான அச்சலா செனவிரத்தின நேற்று (21.11.2025) நடத்திய ஊடக மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் அமைப்பதை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அதிகாரப்பூர்வமாக எதிர்த்துள்ளது. […]
ரூ.2000 நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு முக்கிய அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 28 ஆம் திகதி சிறப்பு நினைவு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நாணயத்தாளின் விபரக்குறிப்புகளை கவனமாக அவதானிக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
வடக்கு – கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 23,24,25 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் அதேவேளை காற்றின் வேகம் உயர்வாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் கூறுகையில், “தற்போது வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய இன்று தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த காற்றழுத்த தாழமுக்கம் தொடர்ந்து […]
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழில் திறப்பு
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இதன்பொழுது பொதுச்சுடரினை மாவீரர்களின் உறவினர் ஒருவர் ஏற்றிவைத்து மலரஞ்சலி […]