சடலப் பையை அவமரியாதையுடன் கையாளும் காணொளி ; கியூபெக் கொரோனர் அலுவலகம் விசாரணை

கியூபெக் நகரத்தில் ஒப்பந்த அடிப்படையில் சடலங்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், சடலம் வைக்கப்பட்ட பையை அவமரியாதையுடன் கையாளும் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, கியூபெக்கின் கொரோனர் அலுவலகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் கடும் கண்டனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, கொரோனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு மன்னிப்பும் ஆறுதலும் தெரிவித்துள்ளது. இந்தக் காணொளியானது கியூபெக் நகர வானொலித் […]

பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கதிரையில் நாம் ஒரு சிறந்த தலைவரை அமர்த்துவோம் – சாமர சம்பத்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 160 இலட்சம் செலவில் லண்டன் சென்றமை தொடர்பில் விசாரிப்பதற்காக, 320 இலட்சம் செலவில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது. அது மாத்திரம் போதாது. நாமல் ராஜபக்ஷவின் சட்டப்பட்டப்படிப்பு தொடர்பில் விசாரிப்பதற்கு மேலும் 10 பொலிஸாரை லண்டனுக்கு அனுப்புங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் […]

உலக பாரம்பரிய வார விழா கீழடியில் ஆங்கில குறும்படம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் இனி ஆங்கிலத்திலும் குறும்படம் ஒலி, ஒளிபரப்பாகும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 2023 மார்ச் 5ம் தேதி கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த பொருட்களால் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவர அருங்காட்சியகத்தில் குளிர்சாதன வசதி கொண்ட மினி திரையரங்கில் கீழடி பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. கீழடி அகழாய்வை வெளி கொணர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் உரையுடன் தமிழில் குறும்படம் […]

வாட்ஸ்அப்பில் புதிய விடயம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் அழைப்புகளை, முன்கூட்டியே திட்டமிட்டு ஷெட்யூல் செய்யும் வசதியை ஏற்படுத்தி வருகிறது. குடும்பத்தினருடன் குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டும், அலுவலக குழு விவாதங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

இது பௌத்த சிங்கள நாடு என ஒற்றையாட்சியை திணிப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது – செல்வராசா கஜேந்திரன்

னாதிபதி அனுரா குமார திஸாநாயக்க விடம் தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே இது மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் இந்த மண்ணில் முற்று முழுதாக தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் […]

தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நினைவாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதுடன் 26 […]

யாழிலுள்ள இரும்பு தொழிலதிபரை ஏமாற்றியவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரும்புத் தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரும்பு வாங்கும் தொழிலதிபரை விமான நிலைய வருகை முனையத்திற்கு வரவழைத்து,ரூ.1 மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றார். யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் அவர் இரும்பு வாங்கும் தொழிலதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 […]

காற்றாலைகள் நிர்மாணத்திற்கு எதிர்ப்பு

மன்னார் மாவட்டத்தில் புதிதாக காற்றாலைகளுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த பிரதேசத்தில் 14 காற்றாலைகளை நிர்மாணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தற்போது குறிப்பிடுகிறார். இது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த காற்றாலைகளுக்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுவது என்பது தவறானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் […]

ஒட்டாவா தீயணைப்பு வீரர்கள் சங்கம் கோரிக்கை!

ஒட்டாவா தீயணைப்பு வீரர்கள் சங்கம் (OPFFA), தங்கள் உறுப்பினர்களைப் பணியிடப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க, அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலும் சலவை இயந்திரங்கள் (washers and dryers) மற்றும் உலர்த்திகள் நிறுவுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒட்டாவா நகர சபையைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான நகர வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிப்பதற்கென நடந்த குழு கூட்டத்தில், இந்த கோரிக்கை, ஒரு முக்கியமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையாக முன்வைக்கப்பட்டது. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) சமீபத்தில் தீயணைப்புப் […]

மாகாண நிர்வாக பின்னடைவு; சில அதிகாரிகளின் பொறுப்பின்மையே – ஆளுநர் வேதநாயகன்

வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று […]