வைத்தியர் கேதீஸ்வரன் எச்சரிக்கை!

யாழில் டெங்கு நோய்ப் பரவல் சடுதியாக அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோய்ப் பரவல் சடுதியாக அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தில் 1,220 பேர் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இது கடந்த வருடத்தின் இதே […]

தாய்லாந்து எல்லையில் ‘சைபர் கிரைம்’ மோசடி

தாய்லாந்து எல்லையில் உள்ள, ‘சைபர் கிரைம்’ எனப்படும் ஆன்லைன் வாயிலாக மோசடி செய்யும் மையத்தில் அதிரடி சோதனை நடத்திய மியான்மர் ராணுவம், 350க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கைது செய்தது. ‘டேட்டா என்ட்ரி’ வேலை என்ற பெயரில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ,இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, பணம் பறிப்பது, போலி கிரிப்டோகரன்சி முதலீடு, தொலைபேசியில் வங்கி […]

200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை

முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச மருந்து தயாரிப்பு கூட்டுத்தாபனத்தால் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் மருந்து வகைகளை, அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 350 மருந்து வகைகளுக்கான கட்டுப்பாட்டு […]

சிறுவர் ஆரம்ப கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வெளியீடு

சிறுவர் ஆரம்ப கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்றைய தினம் மாலை கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) இணையத்தளமான (channelnie.nie.ac.lk) சானல் NIE இணையப் பக்கத்திலும் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியிடப்பட்டது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள ஆரம்பக் கல்வி முறைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை நேற்றைய தினம் நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர். GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, […]

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு

தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நான் பலமுறை கோரியுள்ளேன். இந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள். தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும். […]

சென்னை மாநகராட்சி மீது பா.ஜ., குற்றச்சாட்டு

‘சென்னை மாநகராட்சியில், 4,000 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் செய்ய வசதியாக, விதிகளை மீறி ஒப்பந்தப்புள்ளி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும்’ என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனங்களிடம் கடந்த ஜூலையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 4,000 கோடி ரூபாய். ஒப்பந்தப்புள்ளி […]

கனடாவின் முன்னாள் துணை பிரதமருக்கு பிரித்தானியாவில் உயர் பதவி

கனடாவின் முன்னாள் துணை பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரபலமான ரோட் டிரஸ்ட் Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு ஜூலை 1, 2026 முதல் அமுலுக்கு வரும் என்று அந்த கல்வி அறக்கட்டளை நிறுவனம் உறுதிப்படுத்தியது. ஃப்ரீலாண்ட் இந்த பொறுப்பை ஏற்க ஆக்ஸ்ஃபோர்டுக்கு குடிபெயர உள்ளார் என ரோட்ஸ் டிரஸ்ட் பேச்சாளர் பபெட் லிட்டில்மோர் தெரிவித்துள்ளார். ஆனால், ஃப்ரீலாண்ட் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் திட்டத்தை அறிவிக்கவில்லை. அவரது […]

நைஜீரியாவில் இராணுவ தளபதி சுட்டுக்கொலை

நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் மூசா உபா, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு டான் கன்பம் டி உறுதிப்படுத்தியுள்ளார். போர்னோ மாநிலத்தின் டம்போவா எல்.ஜி.ஏ, அசிர் முல்டேவுக்காக வஜிரோகோவைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் சிரேஷ்ட தளபதி கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று நைஜீரிய இராணுவமும் தெரிவித்துள்ளது.

கொலம்பியா பெல்லா கூலாவில் கரடி தாக்குதல்; பலர் காயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் ஏழு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு காடு மற்றும் நதி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை மற்றும் சூழ்நிலை […]