எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் – நாமல் ராஜபக்ஷ சூளுரை

‘பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல், அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்தாலும் […]

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது ஜனனப் பெருவிழா – விசேட தபால் முத்திரை வெளியீடு

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, இலங்கை கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாக, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேட தபால் முத்திரை வெளியீட்டு விழா சாயி மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது. மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஆலோசனைகளுக்கு அமையவும், பெருந்தோட்ட மற்றும் சமூக […]

திரு சின்னையா செல்வரட்ணம்

புத்தளம் கருங்காலிசோலை முந்தலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bümpliz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். காலஞ்சென்றவர்களான சின்னையா கதிராய் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மோகன், சந்திரன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை சுவிஸ் Bern இல் நடைபெறும். RIPBOOK ஊடாக இவ் […]

விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் விபத்து?

துபாய் விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. வானில் சாகச நிகழ்வுக்காக தேஜஸ் விமானம் பறந்து கொண்டு இருந்தது. விமானம் வானில் பறந்து கொண்டிருப்பதை கண்காட்சியை காண கூடியிருந்த பலரும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விமானம், வானில் இருந்து கீழே விழுந்து […]

தலிபான்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

‘சமரசம் செய்யுங்கள் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இதற்கு, இரு நாட்டு எல்லையில் இருந்து இயங்கி வரும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத குழுவே காரணம். வான்வழி தாக்குதல் ஆப்கனின் சர்வதேச எல்லைக்கோடாக குறிக்கப்படும் டூரண்டோ எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இக்குழு, பழமைவாத […]

மெக்சிகோ அழகி ‘மிஸ் யுனிவர்ஸ் 2025’

தாய்லாந்தில் நடந்த, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகிப் போட்டியில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ் பட்டம் வென்றார். இந்த ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடந்தது. இதில், இந்தியா, மலேஷியா, மெக்சிகோ, ஜமைக்கா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இம்மாத முதல் வாரத்தில் இருந்து பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மெக்சிகோ, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, வெனிசுலா ஆகிய நாடுகள், முதல் […]

சித்தங்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கேணியடி வட்டுக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது 68) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் குறித்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 25 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் திடீரென வெடித்துள்ளது. வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது, 16 தொழிலாளர்கள் சம்பவ […]

பருத்தித்துறையில் பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் […]

ஓட்டமாவடியை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேச்சை உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏலவே, தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட […]