வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய முகவர் கைது!
கொழும்பில் செயற்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக […]
சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றை ஏய்க்க முயன்ற பசில் ராஜபக்ஷ
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி ஆகியோர் இந்த […]
பிரதான வீதியில் பாரிய மண்சரிவு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து ஆணொருவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார். முன்னதாக குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. கண்டியின் பஹல கடுகண்ணாவ அருகே உள்ள ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு பெண்ணை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரும் […]
அரச சேவை மறுசீரமைப்பு?
இலங்கையின் அனைத்து பிரதேச செயலாளர்களும் சனிக்கிழமை (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பிரஜா சக்தி’ கிராமிய அபிவிருத்தி குறித்து விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, கிராமிய வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான பிரஜாசக்தி’ செயற்திட்டத்தை கீழ் மட்டத்தில் செயல்படுத்துவது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள்
2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டுக்குளம் சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுண்டிகுளம் சந்திப் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, சுண்டிகுளம் சந்தியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபம் வரை மாவீரரை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீதி ஊடாக மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் மலர் வணக்கம் நிகழ்வும் நடைபெற்றதுடன் மாவீரரின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு அருகில் அஞ்சலி நிகழ்வுகள்
மாவீரர் வாரம் நேற்று வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால், துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை, இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரணில்
இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பதில் பிரதம நீதியரசர் நியமனம்!
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று சனிக்கிழமை (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
யாழில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமை பெறாமலிருப்பது கவலையளிக்கின்றது
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிக்கின்றது என வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற […]
சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதன்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். செயலமர்வை […]