ஊடக அடக்குமுறைகளுக்கு அரசு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – துரைராசா ரவிகரன்

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடக படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டுமெனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில், பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில், கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் […]

இன்று திருமலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது. சம்பூர் ஆலங்குளம் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்களோடு,மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம […]

மலேசியாவில் விஜயின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஜன நாயகன்’-இன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் மலேசியாவில் ஆடியோ லான்ச் இருக்கக்கூடும்.இந்த பதிவில் இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூகங்கள் அடிப்படையில் டிசம்பர் 27, 2025 அன்று […]

அறிமுக நடிகர் அனீஸ் மாசிலாமணி நடிக்கும் ‘ஃப்ரைடே’

தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகர்களான மைம் கோபி – தீனா ஆகியோருடன் அறிமுக நடிகர் அனீஸ் மாசிலாமணி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஃப்ரைடே’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரைடே’ எனும் திரைப்படத்தில் தீனா, அனீஸ் மாசிலாமணி ,மைம் கோபி, ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தூமே இசைமமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தக்தம் மோசன் […]

‘மாண்புமிகு பறை’ படத்தின் இசை வெளியீடு

நடிகர் லியோ. சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மாண்புமிகு பறை’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டார். இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாண்புமிகு பறை: எனும் திரைப்படத்தில் லியோ சிவக்குமார் , காயத்ரி ரெமா, கஜ ராஜ், சேரன் ராஜ், ரமா ,அசோக் […]

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் ‘ BP 180’ முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக அவரது உயிர் பிரிவதற்கு முன் கடைசியாக நடித்த ‘B P 180’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஜே பி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘BP 180 ‘எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, தான்யா ரவிச்சந்திரன், கே. பாக்யராஜ், அருள்தாஸ், இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரேடியன்ட் […]

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு

மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 11 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு நேற்று(21)புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது,கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டன. விசேடமாக அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட […]

160 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட தவளை

இலங்கையில் சுமார் 160 ஆண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனம் சிவனொளிபாதமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அதற்கு ஸ்டெல்லாவின் நட்சத்திர தவளை என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.

குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று (22.11.2025) இடம்பெற்றுள்ளது. மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பூநகரி நல்லூர் மகா வித்தியாலய பரீட்சை மேற்பார்வையாளர் பணி நீக்கம்

கிளிநொச்சி- பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குறித்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(20) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து […]