போதைப் பொருட்களுடன் இருவர் கைது
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) இரவு கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 2600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 27 வயது நபரும், 800 மில்லி கிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய போதை […]
காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்த நிலையில், சிறுவனை அப்பகுதி மக்கள் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரி20 போட்டி; பாகிஸ்தான் அபார வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ரி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி20 போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் மத்திய வரிசை […]
இனவாதத்தை ஒழிக்க, “இலங்கையர் தினத்தை” நடத்த தமிழ், முஸ்லிம் எம்.பிக்களுடன் அநுர சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பு நடத்தியுள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்து, ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது. இனவாதத்தை ஒழிக்க, “இலங்கையர் தினத்தை” நடத்த, ஜனாதிபதி அநுர, எம்மை அழைத்து, எமது ஒத்துழைப்புக்களைக் கோரினார். எனது பதில் உரையில் நான் கூறியதாவது:- “இனவாதத்தை ஒழிக்க, நீங்கள் கோரும் […]
புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எழுச்சி
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் […]
பெண் துஷ்பிரயோகம்: இங்கிலாந்தில் இலங்கைத் தமிழர் கைது..!
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இலங்கை நாட்டவர் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, நாடு கடத்தல் செயற்பாடுகள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் […]
நாட்டிலே நாமல் ராஜபக்ஷதான் எதிர்க்கட்சித் தலைவர் – மனோ கணேசன்
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ, இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டிக் காட்டும் வரை, நாட்டிலே நாமல் ராஜபக்ஷதான் எதிர்க்கட்சித் தலைவர் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பேரணி தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும், “நிகழ்வு ஆரம்பிக்க, முன் – பிடித்த, பின் – பிடித்த, படங்களைப் […]
அரசாங்கத்தினால் கைப்பற்றப்படும் போதை பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்கின்றன?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது பிரபல பாடகர் சங்கீத் விஜேசூரிய பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இந்த அரசாங்கத்தினால் கைப்பற்றப்படும் போதை பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெறும் கண்காட்சி என அவர் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சந்தைக்கு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரசாங்கத்தினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள் பெருந்தொகை […]
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன படத்தில் நடிக்க வாய்ப்பு?
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று குறித்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். […]
தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள தொல்பொருள் பதாகை அகற்றப்படாவிட்டால் சட்டநடவடிக்கை ?
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் இ. திரேசகுமாரன் தெரிவித்தார். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் சனிக்கிழமை (22) பிரதேசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து […]