மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு-2025 ஜெர்மன் வாழ் தமிழ் மக்களால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.
இன்றைய வானிலை
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா […]
இரட்டை குழந்தைகள் யாழில் உயிரிழப்பு
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் […]
இன்று கூட்டு எதிர்க்கட்சிகளின் அரச எதிர்ப்பு பேரணி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன. எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி […]
இன்று மாவீரர் வாரம் ஆரம்பம்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த […]
உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்?
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சம்பவ விவரங்கள்: * விமானத்தின் விபரம்: இது எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK-434 என்ற விமானமாகும். * பயண வழி: விமானம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. […]
தென் கடற்பரப்பில் கைதான மீனவர்கள் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
தென் கடற்பரப்பில் நேற்று (20) கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அப் பொதிகளில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் இருந்துள்ளதோடு, T-56 ரக துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். By C.G.Prashanthan