வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையேற்பு
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக சிறிவர்தன, காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (20) அன்று சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது […]
போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன – சமிந்த விஜேசிறி கருத்து
ஊடகங்களில் பொய்யை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் மோசடிகளை […]
தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் சிதைக்கப்படுகின்றார்கள் – அர்ச்சுனா
ஊழல் குறித்து பல கோப்புக்களை சமர்ப்பித்துள்ள நிலையில் 6ஆவது ஊழல் தொடர்பான கோப்பை தற்போது சமர்க்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 40 வருடம் போரால் பாதிக்கப்பட்டு அழிந்த இனத்தை சில கட்சிகள் திரும்ப திரும்பவும் அழித்துக் கொண்டே இருக்கின்றன. ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் சோலர் பவர் என்ற திட்டம் 2024ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்தியாவினுடைய ஒரு கம்பனி முன்னின்றது. எனினும் குறித்த […]
ஐ.நா உச்சிமாநாட்டில் தீ விபத்து
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளை, குறித்த இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உட்பட இந்தியக் குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிரேசில் […]
Behind Me யின் தலைமைக் காரியாலயத்தில் மாவீரர் தின நிகழ்வு
தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிரை மாய்த்த மாவீரர்களுக்கான மாவீரர் தின நிகழ்வு இன்று நவம்பர் 21 முதல் 27 வரை Canada, Behind Me யின் தலைமை காரியாலயம் 2283 Argentia Rd, Mississauga வில் நடைபெறவுள்ளது. உணர்வுள்ள தமிழ் உறவுகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள். மேலதிக விடயங்களுக்கு அழையுங்கள்; 416 564 2481/647 627 7814 .
பேருந்தில் சிறுவனின் பையில் கஞ்சா
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தில் சிறுவனின் பையில் இருந்து பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டதாாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தை புத்தல பொலிஸார் புத்தல நகரில் சோதனையிட்டனர். 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒரு சிறுவனின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தில் இருந்த சிறுவனின் தந்தையும், கஞ்சாவின் உரிமையாளருமான அவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
சிம்பாப்வேயிடம் தோற்ற இலங்கை
பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் இலங்கை தோற்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: இலங்கை சிம்பாப்வே: 162/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 49 (42), சிகண்டர் ராசா 47 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க: 3/32 [4], எஷான் மலிங்க 2/27 [4], துஷ்மந்த சமீர 1/27 [4], மகேஷ் தீக்ஷன 1/30 [4]) இலங்கை: […]
மாற்றப்பட்ட விஜயின் பரப்புரை கூட்டம்
இந்திய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரைக்கான திகதி பொலிஸாரால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரூரில் விஜயின் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே சென்னையில் அண்மையில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். அப்போது, […]
தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தராதரங்களை நிறைவேற்றுவோம் – பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர
மனித உரிமைகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முக்கிய தராதரங்களை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர உறுதியளித்துள்ளார். நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ – பசுபிக் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெல்ஜியத்தை சென்றடைந்துள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் தெற்காசிய நாடுகளுடனான தொடர்புகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் சேர்பன்-டிமிட்ரி ஸ்டர்ட்ஸா […]