திருமதி யோகேஸ்வரன் விஜயந்தி (விஜி)

வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் விஜயந்தி அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா விஷாலாட்சி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,நகுலேஸ்வரன் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஆரியன், ஆதன், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரதீபன், பிரதாபன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும் அனலைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திருஞானம், […]

யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டு. மாநகர சபை அமர்வில் அஞ்சலி

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை 27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு மட்டு மாநகர சபையினர் வியாழக்கிழமை (20) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு நேற்று வியாழக்கிழமை (20) சபா மண்டபத்தில் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து மாநகரசபையில் செய்யப்பட்ட புனரமைப்பு மற்றும் வாகனம் திருத்தம், நிரந்தர ஊழியர் சம்பளம் போன்ற செலவு […]

அச்செழுவில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணைக்கு சென்றவேளை அங்கு நின்ற இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார். […]

மாவீரர் வாரம் ஆரம்பம்; தமிழர் வாழ் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த […]

கனடாவின் பிரம்டன் நகரம் புலிக்கொடியை அங்கீகரித்தது

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர். இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் […]

இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார். By C.G.Prashanthan

மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இதன் போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி […]

சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த துலார குணதிலக்க என்பவர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன முரண்பாட்டைத் தூண்டுதல் மற்றும் அந்த நேரத்தில் விகாரைக்கு சென்ற அரசாங்க அமைச்சர்களை துன்புறுத்த மக்களைத் தூண்டுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவர் பல முன்னாள் […]

திருமலை -புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரகம்

திருகோணமலை – புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக 37வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் […]

ராஜபக்சக்களுடன் ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது

அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்க மாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேரணியில் பங்கேற்பீர்களா, இல்லையா எனக் கட்சியின் செயலாளர் என்னைக் கேட்டார். இதன்போது பங்கேற்கப்போவதில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டேன் என்று நவீன் திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.