வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை (21) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி […]
தங்கம் விலை மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை இன்று (21) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.303,000 ஆக குறைந்துள்ளது. இதற்கமைய, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.330,000 ஆக குறைந்துள்ளது.
யாழ். பல்கலையில் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
பேரணி களத்தில் கட்டப்பட்டுள்ள புற்கட்டுகள்
நுகேகொடைக்கு செல்லும் அனைத்து சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்களில் புற்கள் தொங்கிக் கொண்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21) நுகேகொடை எலிமஹான் ரங்க பீடத்தில் ஒரு பேரணியை நடத்த உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள் இணைப்பு
இலங்கை மற்றும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள் உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடி நேற்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், இந்த இணைப்புத் திட்டத்திற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், “இலங்கையைப் பொறுத்த வரையில், மிகச் சிறந்த விலையில் மின்சாரம் பரிமாறப்படுவதை நாங்கள் உறுதிசெய்வோம்” என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இந்த இணைப்பு மூலம் மின் பற்றாக்குறை காலங்களில் […]
கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) அன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலியை செலுத்தினார். அந்த வகையில் மாவீரர் துயிலுமில்லத்தினை தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை செலுத்தினார். மேலும் 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு […]
வெள்ளை மாளிகை செய்தியாளரை “வாயை மூடு பன்றிக்குட்டி” என்ற ட்ரம்ப்
புகழ்பெற்ற ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் மூத்த நிருபரும், வெள்ளை மாளிகை செய்தியாளருமான கேத்தரின் லூசியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் இழிவான வார்த்தைகளால் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 14-ம் திகதி ஜனாதிபதியின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் குறித்து கேத்தரின் லூசி கேள்வி எழுப்பினார். ஏற்கெனவே பதிலளித்திருந்த ட்ரம்ப், அவர் மீண்டும் ஒரு துணைக் கேள்வி கேட்க முயன்றபோது, அவரைக் கையஉயர்த்தி […]
திரு தியாகராஜா செல்வராஜா (ராஜன்)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, சுவிஸ் Bern Köniz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா செல்வராஜா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று சுவிஸ் Bern இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார், தியாகராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நடராஜா, பரமநாதன், காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கோமகள், தர்சினி, உதயமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புஷ்பாகரன், சுகந்தன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் கரிஷ்மா, துஷ்மா, […]
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றல்
தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது. சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை( 21) ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி […]
நுகேகொடை பொதுப் பேரணிக்கு ஒலிப்பெருக்கி நிபந்தனை
நுகேகொடை பொதுப் பேரணி நடைபெறும் ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கிற்கு அருகில் கல்விப் பொதுச் சான்றிதழ் (உயர்தர) பரீட்சை மத்தியநிலையம் இருப்பதால், பேரணி நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது. உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் உரிம நிபந்தனைகளுக்கு இணங்க செயல்படுமாறு காவல்துறையும் அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை காலை 8.30 மணி முதல் காலை 11.40 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி […]