நுகேகொட மாபெரும் பேரணி ஆரம்பம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதுடன், களத்தில் அதிகளவான மக்கள் காத்திருக்கின்றனர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர். இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அறிமுக நடிகர் அறிவழகன் நடிக்கும் ‘நெல்லை பாய்ஸ்’
புதுமுக நடிகர் அறிவழகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நெல்லை பாய்ஸ்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கமல் .ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெல்லை பாய்ஸ்’ எனும் திரைப்படத்தில் அறிவழகன், ஹேமா ராஜ்குமார், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசாந்த் அர்வின் இசையமைத்திருக்கிறார். நட்பை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் […]
‘மை லார்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
கிராமத்து நாயகன் சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ எச காத்தா..’ எனும் முதல் பாடலும் பாடலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜெ. அச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், கோபி நயினார், ஜெயபிரகாஷ், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய […]
‘சர்வம் மாயா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான நிவின் பாலி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சர்வம் மாயா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்வம் மாயா’ எனும் திரைப்படத்தில் நிவின் பாலி, பிரீத்தி முகுந்தன், அஜு வர்கீஸ், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரண் வேலாயுதன் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக […]
கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற ‘லோகா ‘படத்தை தொடர்ந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் எஸ். திரவியம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், தேவதர்ஷினி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். வித்தியாசமான கதை கள பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை […]
`ரவுடி அண்ட் கோ’ சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் ராஷி கண்ணா
கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரவுடி அண்ட் கோ. படத்தில் கதாநாயகனாக சித்தார்த் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிராங்ஸ்டர் ராகுல் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உணவு டெலிவரி சேவை போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்ப்பரேட் ரவுடி உலகத்திற்கு ரசிகர்களை இந்த படம் அழைத்து செல்கிறது. நகைச்சுவை நிறைந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் […]
பாலத்தை இழுத்துச் சென்ற பெரும் வெள்ளம்; மத்திய வியட்நாமில் மழை
மத்திய வியட்நாமில் 40க்கு மேற்பட்டோரின் உயிர்களை காவு வாங்கிய மழை, வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால், லாம் டோங் (Lam Dong) மாகாணத்தில் ஓடும் டா நிம் ஆற்றின் (Da Nhim River) மீது பல தசாப்தங்களாக உறுதியாக நின்ற தொங்கு பாலம் உடைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி வைரலாகியிருக்கிறது. அந்நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]
பிலிப்பைன்சில் சீனாவுக்காக உளவு பார்த்த பெண் மேயர்?
பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அங்கு மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சீனாவுக்கு சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். இதன்மூலம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் மோசடி செய்யப்பட்டனர். எனவே சீனாவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஆலிஸ் குவோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு […]
நயினாதீவின் கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இவ்விடயம் குறித்து உறுப்பினர் கார்த்தீபனால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், குறிகாட்டுவான் நயினாதீவு இடையேயான கடற் போக்குவரத்து சேவையை […]
கம்போடியாவில் ஆற்றில் விழுந்து பஸ் விபத்து ; 16 பேர் உயிரிழப்பு
கம்போடியாவில் பஸ் ஒன்று பாலமொன்றில் மோதி ஆற்றில் விழுந்து நேற்று வியாழக்கிழமை (20) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 16 பேயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பிரசித்திப்பெற்ற அங்கோர் வாட் ஆலய வளாகத்தின் தாயகமான சீம் ரீப்பில் இருந்து தலைநகர் புனோம் பென் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே மத்திய மாகாணமான கம்போங் தோமில் வியாழக்கிழமை (20) அதிகாலை பஸ் விபத்துக்குள்ளானதாக அப்பிராந்திய பிரதி பொலிஸ் அதிகாரி சிவ் சோவன்னா தெரிவித்துள்ளார். சாரதி தூக்க […]