போரதீவுப்பற்றில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளால் அதிருப்தி!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் வெள்ளிக்கிழமை (21) தொல்பொருள் திணைக்களம் நட்ட பெயர் பலகையினை அகற்றிய பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்களும், கிராம பொதுமக்களும் தலையீட்டினால் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன்,மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் வருகை தந்தனர். போரதீவுப்பற்று பிரதேசசெயலகம் சென்ற தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் சென்று […]

அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025 சர்வதேச கண்காட்சி ஆரம்பம்

மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும். மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார். “நீர்வளத்தால் செழிப்பான எதிர்காலம்” […]

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் வெள்ளிக்கிழமை (21) நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. மாவீரர் வார ஆரம்ப நிகழ்வான இன்றைய நினைவேந்தலில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி, அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு இதன்போது அஞ்சலி செலுத்தினர்.

மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

மீசாலை- தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 60 வருடங்களாக புனரமைக்காமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைக்கப்படாமல் 60 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படுபவர்கள் சார்பில் குறித்த வீதியில் வசித்துவரும் […]

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு […]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (21) மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகத்துக்கு முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர். பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி சார்பில் இருவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் மாத்திரமே இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஊடக சந்திப்பு

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதியை மேற்கோள்காட்டி, அவரிடம் அவ்விடயத்தை தமிழரசுக்கட்சி மீளவலியுறுத்தியிருப்பது தமிழர்களுக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய துரோகமாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (21) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே கஜேந்திரகுமார் […]

அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் நுகேகொடை பேரணி சவாலாக அமையாது

நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் சவாலாக அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக இன்று (21) கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் தனது விஜயத்தின் போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார். சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சினைகள் மற்றும் உடனடித்தீர்வு காணப்பட […]

நுகேகொடை பேரணிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி இன்று (21) பிற்பகல் நுகேகொடவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த ‘எமது தலைமுறை’ (Ape Parapura) கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி அவர்கள், எதிர்க்கட்சியின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இது ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். மீண்டும் ராஜபக்சக்களால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்றும், சஜித் பிரேமதாஸ தமிழர்களின் வாக்குகளைப் பெற்று, […]

நுகேகொட பேரணியில் ரணிலுக்கு நன்றி தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்பு பேரணி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ள பொதுமகன் ஒருவர் ”ரணிலுக்கு நன்றி”(Thank You Ranil) என்ற வாசகத்துடனான பதாதையுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், அங்கு கலந்து கொண்டுள்ள ரணில் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, ”பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நாட்டின் கட்டியெழுப்பியது ரணில்தான். நாட்டில் இருந்த […]