இலங்கையின் கிரிக்கெட் வீரரே எனது குழந்தையின் தந்தை?
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சாமிக்க கருணாரட்னவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரட்ன எனத் தெரிவித்து பெண் ஒருவரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கும் சாமிக்க கருணாரட்னவிற்கும் பிறந்த குழந்தையை அவர் ஏற்க மறுப்பதாக குறித்த பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை சாமிக்க என்பதனை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்யக் கூடிய பரிசோதனைகளை […]
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி இனிமேலும் புறக்கணிக்க முடியாது
வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை ஜே வி பி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன (SLPP) யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் விமர்சனம் வெளியிட்டுள்ளார். பிரதான எதிர்க் கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடையில் இன்று நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜேவிபி அரசாங்கம் தமிழ் பேசும் சமூகங்களுக்கு அளித்த எந்த ஒரு உறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வடக்கு கிழக்கில் […]
நுகேகொடையில் மகிந்தவின் ஆதரவாளர் நாமலை ஜனாதிபதியாக்க முயற்சி?
அரகலயவில் போராடியவர்களை அடித்து விரட்டிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் ஒருவர் நுகேகொடை பேரணியிலும் பங்குபற்றியிருந்தார். நுகேகொடை எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21.11.2025) பாரிய பேரணியொன்றை நடத்தினர். இதன்போது, மகிந்தவின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று அரகலய போராட்டக்காரர்களுக்கும் மகிந்த ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது அன்றையதினம், பிரதமராக இருந்த மகிந்த, தனது பதவியிலிருந்து […]
போராட்டத்தின் முதன்மை கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியுள்ளோம் – ரணில்
இலங்கை ஆசியாவின் மிகப் பழைமையான ஜனநாயகம் மிக்க நாடாகும். லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை எதிர்கொள்ளும் பிற நாடுகளைப் போலல்லாமல், இந்த ஜனநாயகப் பாதையைப் பேணுவது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பொது நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார எழுதிய ‘போராட்டத்தின் போலி வலிமை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். […]
இத்தாலியில் மனைவியை கொடூரமாக தாக்கிய இலங்கையர் கைது
ஐரோப்பிய நாடான இத்தாலியில் மனைவியை கொடூரமாக தாக்கிய இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சலேர்னோ நகரின் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. வீதியில் நடந்த கடுமையான வாக்குவாதம் மோதலாக மாறியமையினால் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாரின் விசாரணைகளுக்கமைய, குறித்த நபர் தனது மனைவியை சுத்தியல் மற்றும் ஊன்றுகோலால் பலமுறை தாக்கியுள்ளார். அத்துதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் […]
கனடா மிஸ்ஸிசாகா விபத்து; விசாரணை ஆரம்பம்
மிஸ்ஸிசாகாவில் சாலையைக் கடக்க முயன்றபோது, ஒரு ஆணும் ஒரு இளம் சிறுவனும் தனித்தனியான இரண்டு வாகனங்களால் மோதப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதலில் தெற்கு நோக்கிச் சென்ற வெள்ளை செவி எஸ்யூவி (white Chevy SUV) ஒன்று பாதசாரிகள் இருவர் மீதும் மோதியதாகவும், பின்னர் அவர்கள் எதிர்த் திசையில் வடக்கு நோக்கிச் சென்ற வோக்ஸ்வாகன் (Volkswagen) கார் மீது, தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புகின்றனர். வோக்ஸ்வாகன் காருக்கு அடியில் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவனை […]
ஒன்டாரியோ; ஒட்டாவா நகரத்திற்கு சிக்கல்!
ஒன்டாரியோ மாகாணத்தின் ‘Building Faster Fund’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோடிக்கணக்கான டொலர் நிதியை ஒட்டாவா நகரம், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இழக்க நேரிடும் என்று நகர திட்டமிடல் அதிகாரிகள் கணித்துள்ளனர். இந்த நிதியைப் பெறுவதற்கான மாகாணத்தின் வீட்டுவசதி தொடக்க இலக்குகளை (housing start targets) அடைவதில் ஒட்டாவா நகரம் இந்த ஆண்டும் பின்தங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதி அளிப்பதில் இந்த மாகாண நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், […]
கனடாவில் வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
கனடா நாட்டின் அனைத்து மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து, பல பொருட்களின் மீதான மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் அச்சுறுத்தல்களின் வெளிச்சத்தில், உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதும், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் கனடாவின் பொருளாதாரத்தைக் குறைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். Canadian Mutual Recognition Agreement என்று அழைக்கப்படும் இந்த பரஸ்பர அங்கீகார […]
ஆஷஸ் தொடர்; முதல்நாளில் நடந்த சுவாரஸ்யம்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் இன்று 21-ந் திகதி தொடங்கி உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை […]
அநுர அணிந்த உடையை பேசுபொருளாக்கிய நுகேகொடை பேரணி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்முறையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் போது அணிந்திருந்த உடை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த விமர்சனம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது நுகேகொடையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது இடங்களிலும் பதவியேற்பு மற்றும் கடமையேற்பு நிகழ்வுகளின் போதும் கூட அமைச்சர்கள் பௌத்த மதத் துறவிகளை வணங்குவதில்லை என்றும் […]