வங்காள விரிகுடாவில் உருவாகின்றது தாழமுக்கம்!
நாளை மறுதினமளவில் அதாவது சனிக்கிழமை 22 ம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் வட கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்குகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் […]
சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கனடியத் தமிழர் பேரவை வலியுறுத்தல்
சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் பௌத்தம் எனும் போர்வையில் திருகோணமலையில் பதிவாகியிருக்கும் குண்டர் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒடுக்குமுறை மற்றும் […]
மீண்டும் ஒரு வன்முறைப் போராட்டத்தை உருவாக்கி விட வேண்டாம்
2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் போலே மீண்டும் ஒரு வன்முறையை உருவாக்கிவிட வேண்டாம் என எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். அத்தோடு, மீண்டும் அவ்வாறான ஒரு பிரச்சினை உருவாகாமல் இருப்பதற்கு தான் தாம் கொழும்பில் மக்களுக்கு தெளிவு படுத்தல் கருத்தரங்கை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தக் காரணம் கொண்டும் அநீதிக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த நாட்டின் […]
வடமராட்சி கிழக்கு வலி கண்டி கிராமத்தில் மரம் நடுகையும் கலந்துரையாடலும்
யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வலிக்கண்டி கிராமத்தில் புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வெண்மதி சிறுவர் கழகத்தின் வேண்டு கோளுக்கு இணங்க நேற்று மர நடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவ் நிகழ்வின் பின்னர் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வலிககண்டி கிராம மக்களுக்குமிடையே கலந்துரையாடலும் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் வலிக்கண்டி மக்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கிவரும் பலவேறு அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கிராமத்தின் சிறுவர்களின் பொழுதுபோக்கு […]
புத்தர்சிலை விவகாரம்; NPP யில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்!
தமிழரசுக் கட்சி 15 வருடங்களாக இனப்படுகொலையாளிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை வரவிடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்குள் முடக்கி இனப்படுகொலையாளிகளை பாதுகாத்ததன் விளைவாகவே அவர்கள் இன்றும் இனவாதமாக நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்படுகின்றார்கள். தமிழரசுக் கட்சி வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்து ஆதரவு வழங்கியுள்ளது. அதன்மூலம் அனுரவின் இனவாத வரவுசெலவுத் திட்டத்திற்கு வெள்ளையடித்துள்ளார்கள். கடந்த செப்ரெம்பர் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் சர்வதேச விசாரணைக் கோரிக்கை வரவிடாமல் தடுப்பதில் சுமந்திரன் செயலாளராக உள்ள தமிழரசுக் […]
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்; முக்கிய அறிவித்தல்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ், இந்த நிறுவனங்கள் அனைத்தும் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடுகின்றன என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது. புதிதாக உறுதி செய்யப்பட்ட “SGO/sgomine.com” உட்பட, 23 நிறுவனங்கள்/செயலிகள்/குழுக்கள் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபடுவதாக […]
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்ந்த மூடுபனி
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக, விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக, புதன்கிழமை (19) காலை வந்த மூன்று விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. சீனாவின் குவாங்சோவிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881, மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இந்தியாவின் மும்பையிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-142, மத்தல விமான […]
நாமல் ராஜபக்ச லண்டனில் பெற்ற சட்டமாணி பட்டம்; சான்றித கையொப்பத்தில் சிக்கல்?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிக விவாதம் நடந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற கல்வி வலைத்தளம் ஒன்று நாமல் ராஜபக்சவின் சட்டமாணிப் பட்டத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது. அதில் நாமல் ராஜபக்ச City University of Londonஇல் பெற்ற சட்டப் பட்டப்படிப்பின் பழைய மாணவர்களது பட்டியலில் 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்தின் முன்னாள பிரதமர் மார்கரெட் தாட்சர் பெற்றுள்தோடு இரண்டாம் இடத்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு […]
மேஃபீல்ட் தோட்டத்தில் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் வேலைநிறுத்தம்
கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் குழு வேலை நிறுத்தத்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(16) அன்று தேயிலை இலைகளைப் பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் குளவி கொட்டுக்கு உள்ளானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தோட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததே இதற்குக் காரணம் என தெரிவித்தனர். தோட்ட நிர்வாக தொழிலாளர்களுக்கு முறையான வசதிகளையும் மரியாதையையும் வழங்குவதில்லை என்றும், இதன் காரணமாக தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் நிலவுவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். […]