சிங்கள மக்கள் இல்லாத இடத்தில் ஏன் புத்தர் சிலைகள்? – வேந்தன் கண்டனம்

திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில் ஊடகக்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் கடற்கரையில் சட்டத்திற்கு புறம்பாக மக்களின் ஏதிர்ப்பையும் மீறி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. கடந்தகால அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் […]

மனநலம் மற்றும் போதைப்பொருள் பாவனை; பொலிஸாரின் தலையீடு இல்லாது வெற்றிக் கண்ட ANCHOR

கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள சென்ட்ரெடவுன் (Centretown) பகுதியில், பொலிஸாருக்கு மாற்றாகச் செயற்படும் சமூகத்தின் தலைமையிலான நெருக்கடி உதவிக் குழு ஆனது, தனது முதலாவது ஆண்டில் 4,400க்கும் அதிகமான மனநலம் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நெருக்கடி அழைப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளது. இதில் 92% வீதமான அழைப்புகளுக்குப் பொலிஸாரின் தலையீடு இல்லாமலேயே தீர்வு காணப்பட்டதாக ஒட்டாவா நகரத்தின் புதிய அறிக்கை காட்டுகிறது. Alternate Neighbourhood Crisis Response (ANCHOR) எனப் பெயரிடப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், 2024 ஆம் […]

கடந்த ஆண்டில் 257,000 பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்?

கடந்த ஆண்டில் 257,000 பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தற்போது தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஆண்டில், பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள் எண்ணிக்கை 77,000 என தெரிவிக்கப்பட்டது. எனினும் உண்மையில் 257,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக தற்போது குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை 60,000 என முன்னர் கூறப்பட்ட நிலையில், 143,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை வருகையைக் […]

பருவ மழை வெள்ளத்தில் சிக்கிய மீன் வகைகள்

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக் கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் வடிந்தோடும் வெள்ள நீரில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும் எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகமாக பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக அவ்விடத்தில் […]

எதிர்த்தரப்பை கேலி செய்த அர்ச்சுனா

மாகாண சபைத்தேர்தலை வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். ஒரு இராமநாதன் அர்ச்சுனாவிற்கு 159பேரும் பயப்படுவதை நினைத்து வெட்கமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திலே பொருளாதார மத்திய நிலையமே இல்லை. ஆனாலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தை சீரமைக்க அமைச்சர் சந்திரசேகருக்கு எவ்வளவு கூறியும் அதில் அவர் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை. மேலும் பிரஜா சக்தி என்ற ஒன்றை இந்த அரசாங்கம் […]

கனடா கியூபெக் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ள கிறிஸ்தவ அமைப்பு

கியூபெக் நகராட்சி சபை மீது “Burn 24/7 Canada Worship Ministries” என்ற கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. கடந்த கோடைகாலப்பகுதியில், கியூபெக் நகரில் சர்ச்சைக்குரிய அமெரிக்க இசைக்கலைஞர் சீன் ஃபாய்ட் (Sean Feucht) பங்கேற்கவிருந்த இசை நிகழ்ச்சியைக் திடீரென ரத்து செய்தமைக்காகவே, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கியூபெக் நகராட்சி சபை அடிப்படை உரிமைகளை மீறியதாக, அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. குறித்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக நகராட்சி சபைக்கு தாம் செலுத்திய வாடகைத் தொகையைத் திருப்பித் […]

2026 உலகக் கிண்ணம்; நெய்மருக்கு உடற்றகுதி காலக்கெடு

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத்துக்கு உடற்றகுதியுடன் இருக்கின்றார் என்று நிரூப்பிப்பதற்கு பிரேஸில் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி ஆறு மாதங்களை வழங்கவுள்ளார். காயங்கள் காரணமாக பிரேஸுக்காக அதிக கோல்களைப் பெற்ற நெய்மர், கடந்த இரண்டாண்டுகளாக பிரேஸிலுக்காக விளையாடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகக் கிண்ணத்தில் இருக்கக் கூடிய பட்டியலில் நெய்மர் இருப்பதாகவும், தாங்கள் இறுதித் தேர்வில் பிழைகளை விடாமலிருக்க அவரை அவதானிப்பதாக அன்சிலோட்டி கூறியுள்ளார்.

புதுக்குடியிருப்பபில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியினை […]

இலங்கையர்களிடம் கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி இலங்கையர்களிடம் 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற தோட்ட மேலாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாக காலி மற்றும் நிக்கவெரட்டியவில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா 1.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், வாரக்காபொல, அம்பகலகந்தாவில் உள்ள சந்தேகநபரின் […]

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் வீதிகளுக்கு அடையாளக் குறியீடுகள் தேவை

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகள் ஆலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை வாகன சாரதிகளுக்கு அடையாம் காண்பிக்கும் வகையில் வீதி அடையாளக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதுடன் வேகக் கட்டுப்பாட்டு அடையாள கம்பங்களையும் நாட்டவும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் குறித்து உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் சபையில் […]