பாடம் நடத்தாமலே பேராசிரியர்களுக்கு சம்பளம்: சென்னை பல்கலையில் அவலம்
சென்னை பல்கலையில், சாயம் போன துணி போல, சமய படிப்புகளில் யாரும் சேராததால், காலாவதியாகி உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1857ல் தென் மாநிலங்களிலேயே முதல் பல் கலையாக, சென்னை பல்கலை துவக்கப் பட்டது. முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ், ஆய்வு படிப்புகளை, 78 துறைகள் வாயிலாக வழங்கி, பலதுறை அறிஞர்களை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கு உண்டு. தற்போது, பல்கலையின் மதிப்பும் தரமும் பின்தங்கி, மாநில பல்கலைகளின் தரவரிசையில், 11வது இடத்துக்கு சென்று விட்டது. இந்நிலையில், கணிதம், குற்றவியல், […]
இந்தியா முழுதும் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு, கோவை ‘கொடிசியா’ வளாகத்தில் நேற்று துவங்கியது. இயற்கை வேளாண்மையில் தயாரிக்கப்பட்டு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக உருவாக்கி சந்தைப்படுத்துவது தொடர்பான கண்காட்சியை, பிரதமர் மோடி பார்வையிட்டு, விவசாயிகளிடம் உரையாடினார். இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஏற்படும் இடர்பாடுகள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். அதன்பின், வேளாண் மாநாட்டை துவக்கி வைத்து மோடி சிறப்புரை ஆற்றினார். பிரதமருக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பையா, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் இணைந்து மாலை […]
டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; விசாரணை தீவிரம்
டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது. மேலும்,பரிதாபாத் மற்றும் […]
இந்தியாவின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் முக்கிய ஷரத்துகள் ரத்து?
இந்தியாவின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டங்களின் முக்கிய ஷரத்துகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட ஷரத்துகளில் சிறிய திருத்தம் செய்து மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்திருப்பதாக விமர்சித்து உள்ளது. மத்திய அரசு, 2021ல் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தது. திரைப்பட தணிக்கை சான்றிதழ் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் போன்ற சில மேல் முறை யீட்டு தீர்ப்பாயங்களை இந்த சட்டம் கலைத்தது. மனு தாக்கல் எனவே, மத்திய அரசு கொண்டு வந்த […]
இந்தியாவுக்கு ரூ.822 கோடிக்கு ஆயுதங்கள் விற்க ஒப்புதல்?
இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு […]
புத்தர் சிலை விவகாரம்; முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு – இராஜாங்கனை சத்தாரத்தன தேரர்
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரருக்கு நெருங்கிய தொடர்புள்ளது. கஸ்ஸப தேரர் முழுமையான இனவாதி எனவும் சாடியுள்ளார். கஸ்ஸப தேரருக்கு பணம் கொடுத்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒருவர் என சத்தாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கஸ்ஸப தேரர் தலையிடும் விடங்களில் குழப்பங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும். அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அரசுக்கு […]
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான வாகன இறக்குமதி
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான 700 அத்தியாவசிய வாகனங்களை உள்ளடக்கிய வாகனத் தொகுதியை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தள்ளார். இந்த வாகனத் தொகுதியில் 100 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் (gully bowsers), 175 டிராக்டர்கள், 100 பேக்ஹோக்கள் (backhoes), 160 டிப்பர் ரக வாகனங்கள் (tipper trucks), 75 மோட்டார் கிரேடர்கள் (motor graders) மற்றும் 90 முச்சக்கர வண்டிகள் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் அத்தியாவசிய வாகனங்கள் பற்றாக்குறையாலும், […]
பருத்தித்துறை கொட்டடி மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முத்தரப்பு சந்திப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கொட்டடி மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்க்கான முத்தரப்பு சந்திப்பு ஒன்று நேற்று இடம் பெற்றது. பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை தவிசாளர், உப தவிசாளர் கொட்டடி மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற கூட்டத்தில் கொட்டடி மீனவர்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் அதிகாரிகள் தீர்மானிக்கின்ற இடத்தில் மீன்பிடி துறை அகழும்போது குவிக்கப்பட்ட மணல்மண்ணை கொட்டுவதென்று […]
ரூ. 4 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது
04 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 முதல் 34 வயதுக்கிடைப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு 12, கொழும்பு 15 மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்படப்போகும் மாற்றம்
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய […]