காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துருக்கியில்…
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது அந்த மாநாடு துருக்கியில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான கோப் மாநாட்டை நடத்தும் உரிமை மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைக் கொண்ட ஒரு குழுவிற்கு உள்ளது. தற்போது கோப் 30 உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு […]
வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பத்தை ஏற்படுத்திய சடலம்
காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (20) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளையில் கணவனை கொலை செய்த மனைவி கைது
பதுளை, மஹியங்கனையில் கணவனை கொலை செய்த பெண் மற்றும் அதற்கு உதவிய ஆண் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கபோபுர பகுதியை சேர்ந்த 51 வயது நபர் காணாமல் போனதாக கடந்த 17 ஆம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய ஒக்டோபர் 21 ஆம் திகதி வியன்னா கால்வாயில் அவரது மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களின் பின்னர் கடந்த 24 ஆம் திகதி, கிரந்துருகோட்டே, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் அவரது சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. […]
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பது அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் யசரத்ன, கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள் என்றார். இவ்வளவு இளம் வயதிலேயே புகைபிடிப்பது நீண்டகால சுவாச ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது, இது நுரையீரல் தொடர்பான நோய்களின் ஆரம்பகால தொடக்கத்திற்கு பங்களிக்கிறது என்று அவர் எச்சரித்தார். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் நடத்தை மாற்றங்கள் குறித்து […]
சுகாதாரத் துறை தொழில்களின் சீருடையில் மாற்றம் இல்லை!
தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு நிபுணரோ அல்லது வேறு எவரேனும் ஒரு சுகாதாரத் துறை தொழிலின் சீருடையை மாற்றுவது அவசியம் […]
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி
திருகோணமலை , தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(20) காலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை, 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருகோணமலை – கந்தளாய் தனியார் பஸ் சேவையில் நடத்துனராக ஈடுபடும் நிலையில் கண்டி – திருகோணமலை வீதி பாலம்போட்டாறு பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் […]
தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டம்; தேர்தலை உடனடியாக நடத்துங்கள் – சத்தியலிங்கம்
தமிழ் மக்களது உரிமைக்கான நீண்ட போராட்டத்தின் விளைவான மாகாண சபை முறைமைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் நேற்று (19.11.2025) இடம்பெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மீதான விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல்களை நடாத்துவதற்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக […]
மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத் நிஷாந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளவி தாக்குதலில் இருந்து தனது மகனை பாதுகாக்க தந்தை தனது சட்டையைக் கழற்றி தனது மகனை சுற்றிக் கட்டியுள்ளார். ஏராளமான குளவி கொட்டுதல்களால் காயமடைந்த தந்தையை உள்ளூர்வாசிகள் மிஹிந்தலை […]
தொடரை வென்றது நியூசிலாந்து கடைசி ஓவரில் வெ.இண்டீஸ் தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. மழை காரணமாக தலா 34 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்பல் (4), […]
வென்றது இந்தியா ‘ஏ’!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 73 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா ‘ஏ’ அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, ராஜ்கோட்டில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ […]